»   »  ஷமீதாவின் லீலை!

ஷமீதாவின் லீலை!

Subscribe to Oneindia Tamil

ஷில்பா ஷெட்டி இங்கிலாந்தைக் கலக்கி வருகிறார். அவருடைய தங்கச்சி ஷமீதா ஷெட்டியோ மீண்டும் தமிழைக் கலக்க வருகிறார்.

ஷில்பாவின் தங்கச்சி ஷமீதா, தமிழுக்குப் புதியவர் அல்ல. விஜயகாந்த்துடன் ராஜ்ஜியம் படத்தில் ஜோடி போட்டவர்தான் ஷமீதா. ஆனால் அதன் பிறகு சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்பு தமிழில் வரவில்லை.

இதனால் தெலுங்கிலும், இந்தியிலும் தேட்டையைப் போட்டு வந்தார். இப்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார். ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பில் தமிழில்உருாவகும் லீலை என்ற படத்தின் நாயகியாக ஷமீதா ஷெட்டி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக நந்தனா சென் நடிக்கவுள்ளார். இவர்களுக்கு ஜோடியாக நடிப்பவர்நம்ம மாதவன்.

முதலில் ஷமீதாவுக்குப் பதில் ஷ்ரேயா ரெட்டிதான் (திமிரு, வெயில் புகழ்) நடிப்பதாக இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ விலகி விட்டார். இதையடுத்துரீமா சென்னைக் கேட்டுப் பார்த்தார்கள். அவரும் ஸாரி சொல்லி விட்டார். இதையடுத்தே ஷமீதாவை புக் பண்ணினராம்.

ஹைதராபாத்தில் வைத்து படத்தை ஆரம்பித்துள்ளார் இயக்குநர் கோலா வெங்கடஷ்ே. வழக்கமான காதல் கதையாக இல்லாமல் சற்றே வித்தியாசப்படுத்திச் சொல்லமுயற்சிக்கிறாராம் வெங்கடேஷ்.

ஷில்பா அளவுக்கு இல்லாவிட்டாலும், நல்ல ஆஜானுபாகுவான, களை கட்டும் தேகத்தைக் கொண்ட ஷமீதா, கிளாமருக்கு சற்றும் யோசிக்காதவர். இப்படத்திலும்அவருக்காக பிரத்யேக காட்சிகளை வைத்துள்ளாராம் கோலா.

அப்ப நல்லா கலக்குங்க!"

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil