ரஜினி படம்: ஷமீதா தீவிரம்! சிவாஜியில் ரஜினியுடன் ஒத்தப் பாட்டுக்குக் குத்தாட்டம் போட ரெடியாக இருப்பதாகஷில்பா ஷெட்டியின் தங்காச்சி ஷமீதா ஷெட்டி தடாலடியாக கூறியுள்ளார்.பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டுப் போவதற்குப் பதில் அவர்களதுபடங்களில் சிங்கிள் பாட்டுக்கு சிலுசிலுப்பாக ஒரு குத்தாட்டம் ஆடி விட்டுப் போவதுபுத்திசாலித்தனமானது என்று சில நடிகைகள் நினைக்கிறார்கள்.இதனால் பெரிய ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க முடியவில்லையே என்ற கவலைதீருவது ஒரு பக்கம் என்றால், அத்தனை ஹீரோக்களுடனும் அடிக்கடி ஆடும்வாய்ப்பும் கிடைக்கும் என்பதுதான் முக்கியமான காரணம்.டப்பும் படு வேகமாக கல்லாக் கட்டும், சீக்கிரமாக புகழையும் எட்டலாம். சுஷ்மிதா சென் தமிழில்தான் முதலில் நடிக்க அறிமுகமானார். அவர் நடித்த முதல்படம் ரட்சகன். ஆனால் சுஷ்மிதாவை அது காப்பாற்றவில்லை. ஆனால் முதல்வன்படத்தில் வந்த ஷக்கலக்க பேபி பாடல் ஒரே தூக்காக தூக்கி விட்டது.அதன் பிறகே இந்தியில் புகழ் பெற்ற நடிகையாக மாறினார் ஷக்கலக்க பேபி.குஷியில் மேக்கரீனா மேக்கரீனா பாட்டுக்கு ஆடிய ஷில்பா ஷெட்டிக்கு தெலுங்கில்சில படங்கள் புக் ஆனது.மேலும் அப்படியே கன்னட (ஷில்பாவும் கர்நாடகத்துக்காரர் தான்) பட வாய்ப்புகள்தேடி வந்தன. சமீபத்திய உதாரணம் வாள மீனு மாளவிகா.இப்ப நம்ம மேட்டர் என்னனன்னா, ஷில்பா ஷெட்டியின் தங்கச்சி ஷமீதா ஷெட்டி,இந்தியில் பெரிய ஹீரோயின் ஆகி விட வேண்டும் என்று பிரம்மப் பிரயத்தனம்செய்தார். ஆனால் அவரை நடிக்க வைப்பதை விட உடலைக் காட்ட வைக்கவே இந்திக்காரர்கள்படு ஆர்வமாக இருந்தார்கள். இதனால் கிளாமர் ரோல்கள்தான் பாப்பாவுக்குக்கிடைத்தது.தமிழிலும் விஜய்காந்துடன் ராஜ்ஜியம் படத்தில் நடித்ததோடு கிளாமரில் விளையாடிலும் பலன் கிடைக்கவில்லை.இப்போது இந்தியிலும் அவருக்கு இடமில்லை.இதனால் ஷமீதா ஷெட்டி இப்போது தனது பார்வையை தமிழ் மற்றும் தெலுங்குப்பக்கம் மீண்டும் திருப்பியுள்ளார். தமிழ், தெலுங்கில் குத்துப்பாட்டுக்களில் ஆடி, புகழ்பிளஸ் டப்பைத் தேத்தலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதற்காக அவர் வைத்துள்ளமுதல் குறி சிவாஜியாம்!.சிவாஜி யில் ரஜினிக்கு ஒரு குத்துப் பாட்டை வைக்க ஷங்கர் முடிவு செய்துள்ளாராம்.ரஜினியின் இமேஜைப் பாதிக்காத வகையில் இந்தக் குத்துப் பாட்டு அமையுமாம்.இதில் ஆடுவதற்காக ஒரு சூப்பர் பிகரை ஷங்கர் தேடிக் கொண்டிருக்கிறார் என்றதகவல் ஷமீதா காதுகளை எட்டியுள்ளதாம்.இதனால் புளகாங்கிதமடைந்து போன ஷமீதா, நான்தான் அந்த ஆட்டக்காரியாகஇருக்க வண்டும் என்று சபதமே போட்டு ஷங்கரை அமுக்கும் முயற்சியைத்தொடங்கியுள்ளாராம்.ரஜினி, ஷங்கர், ஏவி.எம், ஏ.ஆர்.ரஹ்மான் என எல்லாமே பிரமாண்டமாகஇருக்கும்போது, அப்படிப்பட்ட கூட்டணியில் தனது பங்கும் இருந்தால் நிச்சயம்பெத்த இடம் கியாரண்டி என்று ஷமீதா கணக்குப் போடுகிறார்.ஷமீதாவின் விருப்பத்தை அறிந்த ஷங்கர் அவரை வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டுவைத்துள்ளாராம். ஏதாவது நல்ல புதுமுக பிகராக இருந்தால் பார்க்கலாம்என்பதால்தான் உடனடியாக ஷமீதாவுக்கு பதில் சொல்லவில்லையாம் ஷங்கர்.

By Staff
சிவாஜியில் ரஜினியுடன் ஒத்தப் பாட்டுக்குக் குத்தாட்டம் போட ரெடியாக இருப்பதாகஷில்பா ஷெட்டியின் தங்காச்சி ஷமீதா ஷெட்டி தடாலடியாக கூறியுள்ளார்.

பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டுப் போவதற்குப் பதில் அவர்களதுபடங்களில் சிங்கிள் பாட்டுக்கு சிலுசிலுப்பாக ஒரு குத்தாட்டம் ஆடி விட்டுப் போவதுபுத்திசாலித்தனமானது என்று சில நடிகைகள் நினைக்கிறார்கள்.

இதனால் பெரிய ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்க முடியவில்லையே என்ற கவலைதீருவது ஒரு பக்கம் என்றால், அத்தனை ஹீரோக்களுடனும் அடிக்கடி ஆடும்வாய்ப்பும் கிடைக்கும் என்பதுதான் முக்கியமான காரணம்.

டப்பும் படு வேகமாக கல்லாக் கட்டும், சீக்கிரமாக புகழையும் எட்டலாம்.

சுஷ்மிதா சென் தமிழில்தான் முதலில் நடிக்க அறிமுகமானார். அவர் நடித்த முதல்படம் ரட்சகன். ஆனால் சுஷ்மிதாவை அது காப்பாற்றவில்லை. ஆனால் முதல்வன்படத்தில் வந்த ஷக்கலக்க பேபி பாடல் ஒரே தூக்காக தூக்கி விட்டது.

அதன் பிறகே இந்தியில் புகழ் பெற்ற நடிகையாக மாறினார் ஷக்கலக்க பேபி.

குஷியில் மேக்கரீனா மேக்கரீனா பாட்டுக்கு ஆடிய ஷில்பா ஷெட்டிக்கு தெலுங்கில்சில படங்கள் புக் ஆனது.

மேலும் அப்படியே கன்னட (ஷில்பாவும் கர்நாடகத்துக்காரர் தான்) பட வாய்ப்புகள்தேடி வந்தன. சமீபத்திய உதாரணம் வாள மீனு மாளவிகா.

இப்ப நம்ம மேட்டர் என்னனன்னா, ஷில்பா ஷெட்டியின் தங்கச்சி ஷமீதா ஷெட்டி,இந்தியில் பெரிய ஹீரோயின் ஆகி விட வேண்டும் என்று பிரம்மப் பிரயத்தனம்செய்தார்.

ஆனால் அவரை நடிக்க வைப்பதை விட உடலைக் காட்ட வைக்கவே இந்திக்காரர்கள்படு ஆர்வமாக இருந்தார்கள். இதனால் கிளாமர் ரோல்கள்தான் பாப்பாவுக்குக்கிடைத்தது.

தமிழிலும் விஜய்காந்துடன் ராஜ்ஜியம் படத்தில் நடித்ததோடு கிளாமரில் விளையாடிலும் பலன் கிடைக்கவில்லை.இப்போது இந்தியிலும் அவருக்கு இடமில்லை.

இதனால் ஷமீதா ஷெட்டி இப்போது தனது பார்வையை தமிழ் மற்றும் தெலுங்குப்பக்கம் மீண்டும் திருப்பியுள்ளார். தமிழ், தெலுங்கில் குத்துப்பாட்டுக்களில் ஆடி, புகழ்பிளஸ் டப்பைத் தேத்தலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதற்காக அவர் வைத்துள்ளமுதல் குறி சிவாஜியாம்!.

சிவாஜி யில் ரஜினிக்கு ஒரு குத்துப் பாட்டை வைக்க ஷங்கர் முடிவு செய்துள்ளாராம்.ரஜினியின் இமேஜைப் பாதிக்காத வகையில் இந்தக் குத்துப் பாட்டு அமையுமாம்.

இதில் ஆடுவதற்காக ஒரு சூப்பர் பிகரை ஷங்கர் தேடிக் கொண்டிருக்கிறார் என்றதகவல் ஷமீதா காதுகளை எட்டியுள்ளதாம்.

இதனால் புளகாங்கிதமடைந்து போன ஷமீதா, நான்தான் அந்த ஆட்டக்காரியாகஇருக்க வண்டும் என்று சபதமே போட்டு ஷங்கரை அமுக்கும் முயற்சியைத்தொடங்கியுள்ளாராம்.

ரஜினி, ஷங்கர், ஏவி.எம், ஏ.ஆர்.ரஹ்மான் என எல்லாமே பிரமாண்டமாகஇருக்கும்போது, அப்படிப்பட்ட கூட்டணியில் தனது பங்கும் இருந்தால் நிச்சயம்பெத்த இடம் கியாரண்டி என்று ஷமீதா கணக்குப் போடுகிறார்.

ஷமீதாவின் விருப்பத்தை அறிந்த ஷங்கர் அவரை வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டுவைத்துள்ளாராம். ஏதாவது நல்ல புதுமுக பிகராக இருந்தால் பார்க்கலாம்என்பதால்தான் உடனடியாக ஷமீதாவுக்கு பதில் சொல்லவில்லையாம் ஷங்கர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X