மாத்தியோசி தயாரிப்பாளர்-இயக்குநர் மீது ஷம்மு புகார்!

By Staff

Shammu
தன்னை சொந்தக் குரலில் பேசவிடவில்லை என்று மாத்தியோசி படத்தின் கதாநாயகி ஷம்மு, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், "மாத்தியோசி படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தபோதே படத்தில் நான்தான் சொந்த குரலில் டப்பிங் பேசுவேன். வேறு ஒருவரை பேச வைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தேன். அதற்கு தயாரிப்பாளர் சேகர் ரெட்டியும், டைரக்டர் நந்தா பெரியசாமியும் ஒப்புக்கொண்டார்கள்.

ஆனால் படப்பிடிப்பு முடிவடைந்தபின், என்னை டப்பிங் பேச கூப்பிடவே இல்லை. வேறு ஒருவரை வைத்து எனக்கு டப்பிங் பேசவைத்தார்கள்.

இதுபற்றி நான் ஏற்கனவே நடிகர் சங்கத்தில் புகார் செய்தேன். நடிகர் சங்கம் எடுத்த நடவடிக்கையின் பேரில், மாத்தியோசி படத்தின் டப்பிங் வேலைகள் நிறுத்தப்பட்டன. ஷம்முதான் சொந்த குரலில் பேச வேண்டும் என்று நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில், என்னை டப்பிங் பேசவைத்தார்கள்.

ஆனால், படத்தில் என் குரல் இல்லை. எனக்கு பதில் வேறு ஒரு பெண்ணை டப்பிங் பேசவைத்து படத்தை முடித்து இருக்கிறார்கள். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...'' என்று குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X