அஜீத்துக்கு ஜோடி ஷம்மு?

இப்போது நந்தா பெரியசாமியின் மாத்தி யோசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஷம்மு, தெலுங்கில் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இன்னொருபக்கம் இத்தனை நாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரகாஷ்ராஜின் மயிலு படம் இப்போது மீண்டும் வளரத் தொடங்கியுள்ளது. இளையராஜா இசையில் அற்புதமான பாடல்களைக் கொண்ட இந்தப் படம் விரைவில் ரிலீசாகும் என்கிறார்கள்.
அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பது குறித்துக் கேட்டால், "ஆமாம்... பேசியிருக்கிறார்கள். இன்னும் அறிவிக்கவில்லை..." எனும் ஷம்முவுக்கு பிற மொழிகளில்தான் நிறைய ஆஃபர்கள் வருகின்றனவாம்.
"ஆனால் எனக்கு தமிழில் நடிப்பதுதான் பிடித்திருக்கிறது. தொடர்ந்து இங்கிருக்கவே விரும்புகிறேன்" என்கிறார் ஷம்மு.
Comments


Click it and Unblock the Notifications