»   »  தெகைக்க வைக்கும் சம்விருதா

தெகைக்க வைக்கும் சம்விருதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

உயிர் மூலம் தமிழ் ரசிகர்களின் நாடி நரம்புகளைப் புடைக்க வைத்த சம்விருதா(ஷம்ருதா என்றும் அழைக்கிறார்கள்) , இப்போது தெலுங்கு ரசிகர்களை தெகைக்கவைக்க எவடைத்தே நக்கேன்டி என்ற படம் மூலம் பட்டையைக் கிளப்பவுள்ளார்.

மலையாளத்து வரவான சம்விருதா நடித்த முதல் படம் உயிர். இப்படத்தில் சிறப்புறசம்விருதா நடித்திருந்தாலும் பெயரை அண்ணி சங்கீதா அள்ளிச் சென்று விடடார்.

இருந்தாலும் சம்விருதாவின் திறமையும் கவனிக்கப்பட்டுள்ளது. இதனால்அம்மணிக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டுள்ளன.

ஆனால், தமிழை விட தெலுங்கில் டப்பு ரொம் ஜாஸ்தி என்பதால் இந்த சேச்சி அங்குநூல்விட்டுப் பார்த்தார். படாரென ஒரு இடத்தில் நூல் மாட்டிக் கொண்டது.

டாக்டர் ராஜசேகர் நடிக்கும் எவடைத்தே நக்கேன்டி என்ற படம் தான் நூல் மாட்டியஇடம். அதில் புக் ஆகி, பெரிய அளவில் அட்வான்ஸையும் வாங்கிக் கொண்டுநடித்துக் கொண்டிருக்கிறார் சம்விருதா.

படு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இப்படத்தில் சம்விருதா அசத்திவருகிறாராம். படம் பாதி முடிந்து விட்டதாம்.

சாமா சந்திரசேகர் என்பவர் தயாரிக்கும் இந்தப் படத்தை சத்ரா இயக்கி வருகிறார்.

மலையாளத்தில் வெளியான லயன் படத்தின் ரீமேக்தான் இந்த எவடைத்தே நக்கேன்டி.

இதில் ராஜசேகருக்கு ஜோடியாக நடிக்க ஆள் கிடைக்காமல்முதலில்அவஸ்தைப்பட்டார்கள். சிம்ரனைக் கேட்டார்கள். அவரும் ஒப்புக் கொண்டு படபூஜையில் பங்கேற்றார். சிம்ரன்-ராஜசேகரை வைத்து படத்துக்கான புரோமோஸ்டில்களும் எடுக்கப்பட்டன.

ஆனால் இடையில் என்ன நடந்ததோ சிம்ரனை கழட்டி விட்டு விட்டார்கள்.

ஒருவழியாக இப்போது சம்விருதா நடித்து வருகிறார். கிளாமர் பற்றிக் கவலையே படவேண்டாம் என்று கூறித்தான் நடிக்கவே வந்தாராம் சம்விருதா.

பட பூஜையன்று சம்விருதா படு பாந்தமாக புடவையில் வந்திருந்தாலும் படத்தில் படுகெறக்கமான கிளாமர் காட்டி விருந்தளித்து வருகிறார்.

புடவையிலேயே பொங்க வைக்கிறாரே சம்விருதா, படத்திலும் ரசிகர்களைதியேட்டரோடு தொங்க வைக்காமலா போய் விடுவார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil