»   »  ஷம்ருதா.. இன்னொரு சேச்சி கேரளாவுக்கும், கோலிவுட்டுக்கும் இப்போது ஏகப் பொருத்தம். யார் வந்து குதித்தாலும் உடனே டாப்புக்குப் போய்விடுகிறார்கள், டப்பை அள்ளி விடுகிறார்கள். இந்த வரிசையில் கோலிவுட் கிரவுனை அலங்கரிக்க கேரளாவிலிருந்துஇன்னொரு விவரமான சேச்சி வந்து இறங்கியிருக்கிறார்.இவரது ஒரிஜினல் கேரளப் பெயர் ஷம்விர்த்தா சுனில். இதை நம்மவர்கள் கேட்டாலே வெளியாள் என்று அடையாளம் கண்டுவிடுவார்கள் என்பதால் பெயரை ஷம்ருதா என மாடர்னாக மாற்றிக் கொண்டே பஸ் ஏறி வந்திருக்கிறார்.தமிழுக்கு புதுமுகம் என்றாலும் மலையாளத்தில் 3 படங்களை முடித்து ஏப்பம் விட்டவர் தான்.சரி, ஷம்ருதா எந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என்பதை சொல்லவே இல்லையே, உயிர் என்ற படத்தின் நாயகிதான் இந்தஉஜாலா அழகி ஷம்ருதா. பார்த்தவுடன் பளிச்சென மனதில் புகுந்து விடுகிறார் ஷம்ருதா. ஷம்ருதாவை வேட்டையாடிய கதையை இயக்குனர் சாமிதிாதனிடமே கேட்போம், இதுதான் எனது முதல் படம் (அத விடுங்க,ஷம்ருதாவுக்கு வாங்க..) படத்தில் ஸ்ரீகாந்த்தான் நாயகன் (அடடா, இது ரொம்ப முக்கியமா). ஷம்ருதாதான் நாயகி (ரைட்டு...அப்படியே ரைட்ல வாங்கி வாங்க...)நாயகியைத் தேடி பல இடங்களிலும் நாயாக அலைந்தோம். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. கடைசியாக கேரளாவுக்கு(வழக்கமாக முதல்லேயே இதை செய்வீங்களே) போய் முகாமிட்டோம். கிட்டத்தட்ட 15 நாட்கள் அங்கு தங்கி பல பெண்களைஇன்டர்வியூ செய்து ஸ்க்ரீன் டெஸ்ட் நடத்தினோம். அப்படி நடத்தப்பட்ட சோதனையில் சிக்கியவர்தான் ஷம்ருதா. மலையாளத்தில் 3 படங்களில் நடித்து விட்டவர் தான்.இருந்தாலும் புது நடிகை மாதிரி ஸ்கிரீன் டெஸ்டுக்கு வந்தார். ரொம்ப அழகான, வசீகரமான முகம். உயிர் கேரக்டருக்கேற்றபொருத்தமான நாயகி. பி.ஏ. இலக்கியம் படித்து வருகிறார்.மலையாளத்தில் சிறந்த புதுமுக நடிகையாக கேரள அரசின் விருது பெற்றவர், விளம்பரப் படங்கள் பலவற்றில் மாடலாகவும்நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் ஷம்ருதா ரொம்பவே பேசப்படுவார். சரி என்று சாமிநாதனை ஒதுக்கி விட்டு ஷம்ருதாவுடன் டூயட் பாடிக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த்தைப் பிடித்தோம். ஷம்ருதா எப்படிஎன்று கேட்டால்,என்னைப் பத்தி கேக்க மாட்டீங்களே என்ற அங்கலாய்ப்புடன் தொடர்ந்தார் ஸ்ரீகாந்த். ஷம்ருதா நல்ல நடிகையாகத் தெரிகிறார்,ஈடு கொடுத்து நடிக்கிறார், அழகாகவும் இருக்கிறார், கலகலப்பாக பேசுகிறார், போதுமா என்று நிறுத்தினார் ஸ்ரீ.இந்தப் படத்தின் கதை ரொம்ப வித்தியாசமானது சார் .. மீண்டும் சாமிநாதன், சரி போனால் போகட்டும் கொஞ்சம் போலபேசட்டும் என்று விட்டோம். சில பேர் காதலுக்காக உயிரையேக் கொடுப்பேன் என்பார்கள். அது சுத்த ஹம்பக் என்பதைவிளக்குவதுதான் உயிர் படத்தின் கதை.உயிரை விடுவது முட்டாள்தனம். அப்படிப்பட்ட காதலே தேவையில்லை என்ற கொள்கை உடையவன்தான் எனது படத்தின்ஹீரோ. இதை மக்கள் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையில் படமாக்கி வருகிறேன் என்றார். காதல் கதை என்பதால் ஷம்ருதாவுக்கு சிருங்கார ரசங்களுடன் நடிக்க நல்ல வாய்ப்பு. புகுந்து விளையாடியிருக்கிறாராம்.இருந்தாலும் எதற்கும் இருக்கட்டுமே என்று மும்பையிலிருந்து டெய்ஸி என்ற குத்துக் குதிரையைக் கூட்டி வந்து ஒரு பாட்டுக்குஆட விட்டிருக்கிறார்கள்.இன்னொரு விஷயம்.. படத்தில் சங்கீதா என்ற ரசிகாவும் இருக்கிறார்.இவன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பெண் கேமராஉமன் பவுசியா தான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஷம்ருதா.. இன்னொரு சேச்சி கேரளாவுக்கும், கோலிவுட்டுக்கும் இப்போது ஏகப் பொருத்தம். யார் வந்து குதித்தாலும் உடனே டாப்புக்குப் போய்விடுகிறார்கள், டப்பை அள்ளி விடுகிறார்கள். இந்த வரிசையில் கோலிவுட் கிரவுனை அலங்கரிக்க கேரளாவிலிருந்துஇன்னொரு விவரமான சேச்சி வந்து இறங்கியிருக்கிறார்.இவரது ஒரிஜினல் கேரளப் பெயர் ஷம்விர்த்தா சுனில். இதை நம்மவர்கள் கேட்டாலே வெளியாள் என்று அடையாளம் கண்டுவிடுவார்கள் என்பதால் பெயரை ஷம்ருதா என மாடர்னாக மாற்றிக் கொண்டே பஸ் ஏறி வந்திருக்கிறார்.தமிழுக்கு புதுமுகம் என்றாலும் மலையாளத்தில் 3 படங்களை முடித்து ஏப்பம் விட்டவர் தான்.சரி, ஷம்ருதா எந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என்பதை சொல்லவே இல்லையே, உயிர் என்ற படத்தின் நாயகிதான் இந்தஉஜாலா அழகி ஷம்ருதா. பார்த்தவுடன் பளிச்சென மனதில் புகுந்து விடுகிறார் ஷம்ருதா. ஷம்ருதாவை வேட்டையாடிய கதையை இயக்குனர் சாமிதிாதனிடமே கேட்போம், இதுதான் எனது முதல் படம் (அத விடுங்க,ஷம்ருதாவுக்கு வாங்க..) படத்தில் ஸ்ரீகாந்த்தான் நாயகன் (அடடா, இது ரொம்ப முக்கியமா). ஷம்ருதாதான் நாயகி (ரைட்டு...அப்படியே ரைட்ல வாங்கி வாங்க...)நாயகியைத் தேடி பல இடங்களிலும் நாயாக அலைந்தோம். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. கடைசியாக கேரளாவுக்கு(வழக்கமாக முதல்லேயே இதை செய்வீங்களே) போய் முகாமிட்டோம். கிட்டத்தட்ட 15 நாட்கள் அங்கு தங்கி பல பெண்களைஇன்டர்வியூ செய்து ஸ்க்ரீன் டெஸ்ட் நடத்தினோம். அப்படி நடத்தப்பட்ட சோதனையில் சிக்கியவர்தான் ஷம்ருதா. மலையாளத்தில் 3 படங்களில் நடித்து விட்டவர் தான்.இருந்தாலும் புது நடிகை மாதிரி ஸ்கிரீன் டெஸ்டுக்கு வந்தார். ரொம்ப அழகான, வசீகரமான முகம். உயிர் கேரக்டருக்கேற்றபொருத்தமான நாயகி. பி.ஏ. இலக்கியம் படித்து வருகிறார்.மலையாளத்தில் சிறந்த புதுமுக நடிகையாக கேரள அரசின் விருது பெற்றவர், விளம்பரப் படங்கள் பலவற்றில் மாடலாகவும்நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் ஷம்ருதா ரொம்பவே பேசப்படுவார். சரி என்று சாமிநாதனை ஒதுக்கி விட்டு ஷம்ருதாவுடன் டூயட் பாடிக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த்தைப் பிடித்தோம். ஷம்ருதா எப்படிஎன்று கேட்டால்,என்னைப் பத்தி கேக்க மாட்டீங்களே என்ற அங்கலாய்ப்புடன் தொடர்ந்தார் ஸ்ரீகாந்த். ஷம்ருதா நல்ல நடிகையாகத் தெரிகிறார்,ஈடு கொடுத்து நடிக்கிறார், அழகாகவும் இருக்கிறார், கலகலப்பாக பேசுகிறார், போதுமா என்று நிறுத்தினார் ஸ்ரீ.இந்தப் படத்தின் கதை ரொம்ப வித்தியாசமானது சார் .. மீண்டும் சாமிநாதன், சரி போனால் போகட்டும் கொஞ்சம் போலபேசட்டும் என்று விட்டோம். சில பேர் காதலுக்காக உயிரையேக் கொடுப்பேன் என்பார்கள். அது சுத்த ஹம்பக் என்பதைவிளக்குவதுதான் உயிர் படத்தின் கதை.உயிரை விடுவது முட்டாள்தனம். அப்படிப்பட்ட காதலே தேவையில்லை என்ற கொள்கை உடையவன்தான் எனது படத்தின்ஹீரோ. இதை மக்கள் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையில் படமாக்கி வருகிறேன் என்றார். காதல் கதை என்பதால் ஷம்ருதாவுக்கு சிருங்கார ரசங்களுடன் நடிக்க நல்ல வாய்ப்பு. புகுந்து விளையாடியிருக்கிறாராம்.இருந்தாலும் எதற்கும் இருக்கட்டுமே என்று மும்பையிலிருந்து டெய்ஸி என்ற குத்துக் குதிரையைக் கூட்டி வந்து ஒரு பாட்டுக்குஆட விட்டிருக்கிறார்கள்.இன்னொரு விஷயம்.. படத்தில் சங்கீதா என்ற ரசிகாவும் இருக்கிறார்.இவன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பெண் கேமராஉமன் பவுசியா தான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
கேரளாவுக்கும், கோலிவுட்டுக்கும் இப்போது ஏகப் பொருத்தம். யார் வந்து குதித்தாலும் உடனே டாப்புக்குப் போய்விடுகிறார்கள், டப்பை அள்ளி விடுகிறார்கள். இந்த வரிசையில் கோலிவுட் கிரவுனை அலங்கரிக்க கேரளாவிலிருந்துஇன்னொரு விவரமான சேச்சி வந்து இறங்கியிருக்கிறார்.

இவரது ஒரிஜினல் கேரளப் பெயர் ஷம்விர்த்தா சுனில். இதை நம்மவர்கள் கேட்டாலே வெளியாள் என்று அடையாளம் கண்டுவிடுவார்கள் என்பதால் பெயரை ஷம்ருதா என மாடர்னாக மாற்றிக் கொண்டே பஸ் ஏறி வந்திருக்கிறார்.

தமிழுக்கு புதுமுகம் என்றாலும் மலையாளத்தில் 3 படங்களை முடித்து ஏப்பம் விட்டவர் தான்.

சரி, ஷம்ருதா எந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என்பதை சொல்லவே இல்லையே, உயிர் என்ற படத்தின் நாயகிதான் இந்தஉஜாலா அழகி ஷம்ருதா. பார்த்தவுடன் பளிச்சென மனதில் புகுந்து விடுகிறார் ஷம்ருதா.

ஷம்ருதாவை வேட்டையாடிய கதையை இயக்குனர் சாமிதிாதனிடமே கேட்போம், இதுதான் எனது முதல் படம் (அத விடுங்க,ஷம்ருதாவுக்கு வாங்க..) படத்தில் ஸ்ரீகாந்த்தான் நாயகன் (அடடா, இது ரொம்ப முக்கியமா). ஷம்ருதாதான் நாயகி (ரைட்டு...அப்படியே ரைட்ல வாங்கி வாங்க...)

நாயகியைத் தேடி பல இடங்களிலும் நாயாக அலைந்தோம். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. கடைசியாக கேரளாவுக்கு(வழக்கமாக முதல்லேயே இதை செய்வீங்களே) போய் முகாமிட்டோம். கிட்டத்தட்ட 15 நாட்கள் அங்கு தங்கி பல பெண்களைஇன்டர்வியூ செய்து ஸ்க்ரீன் டெஸ்ட் நடத்தினோம்.

அப்படி நடத்தப்பட்ட சோதனையில் சிக்கியவர்தான் ஷம்ருதா. மலையாளத்தில் 3 படங்களில் நடித்து விட்டவர் தான்.இருந்தாலும் புது நடிகை மாதிரி ஸ்கிரீன் டெஸ்டுக்கு வந்தார். ரொம்ப அழகான, வசீகரமான முகம். உயிர் கேரக்டருக்கேற்றபொருத்தமான நாயகி. பி.ஏ. இலக்கியம் படித்து வருகிறார்.

மலையாளத்தில் சிறந்த புதுமுக நடிகையாக கேரள அரசின் விருது பெற்றவர், விளம்பரப் படங்கள் பலவற்றில் மாடலாகவும்நடித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் ஷம்ருதா ரொம்பவே பேசப்படுவார்.

சரி என்று சாமிநாதனை ஒதுக்கி விட்டு ஷம்ருதாவுடன் டூயட் பாடிக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த்தைப் பிடித்தோம். ஷம்ருதா எப்படிஎன்று கேட்டால்,

என்னைப் பத்தி கேக்க மாட்டீங்களே என்ற அங்கலாய்ப்புடன் தொடர்ந்தார் ஸ்ரீகாந்த். ஷம்ருதா நல்ல நடிகையாகத் தெரிகிறார்,ஈடு கொடுத்து நடிக்கிறார், அழகாகவும் இருக்கிறார், கலகலப்பாக பேசுகிறார், போதுமா என்று நிறுத்தினார் ஸ்ரீ.

இந்தப் படத்தின் கதை ரொம்ப வித்தியாசமானது சார் .. மீண்டும் சாமிநாதன், சரி போனால் போகட்டும் கொஞ்சம் போலபேசட்டும் என்று விட்டோம். சில பேர் காதலுக்காக உயிரையேக் கொடுப்பேன் என்பார்கள். அது சுத்த ஹம்பக் என்பதைவிளக்குவதுதான் உயிர் படத்தின் கதை.

உயிரை விடுவது முட்டாள்தனம். அப்படிப்பட்ட காதலே தேவையில்லை என்ற கொள்கை உடையவன்தான் எனது படத்தின்ஹீரோ. இதை மக்கள் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையில் படமாக்கி வருகிறேன் என்றார்.

காதல் கதை என்பதால் ஷம்ருதாவுக்கு சிருங்கார ரசங்களுடன் நடிக்க நல்ல வாய்ப்பு. புகுந்து விளையாடியிருக்கிறாராம்.இருந்தாலும் எதற்கும் இருக்கட்டுமே என்று மும்பையிலிருந்து டெய்ஸி என்ற குத்துக் குதிரையைக் கூட்டி வந்து ஒரு பாட்டுக்குஆட விட்டிருக்கிறார்கள்.

இன்னொரு விஷயம்.. படத்தில் சங்கீதா என்ற ரசிகாவும் இருக்கிறார்.

இவன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பெண் கேமராஉமன் பவுசியா தான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil