ஸ்ருதி ஹாசனுடன் பிரேக் அப்?.. சாந்தனு சொன்ன பதில் என்ன தெரியுமா?.. இப்படி சொல்லிட்டாரே

சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமாக இருப்பவர். நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் கலக்கிவரும் அவர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்துவந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாகவே அவர்கள் இரண்டு பேருக்கும் பிரேக் அப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அதுகுறித்து சாந்தனு பதிலளித்திருக்கிறார்.

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பாடகியாக தனது கேரியரை ஆரம்பித்தவர். கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். சர்வதேச தரத்திலான குரல் வளம் உடையவர் என பலரால் பாராட்டப்பட்டவர் ஸ்ருதிஹாசன். பாடல் பாடுவதில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ருதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆராய்ச்சி மாணவராக அந்தப் படத்தில் நடித்திருந்த ஸ்ருதிஹாசன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக, ஒரு மீட்டிங் சீனில் ஸ்ருதிஹாசன் வெளிப்படுத்திய நடிப்பும், டயலாக் டெலிவரியும் அவருக்கு புகழை ஏற்படுத்திக்கொடுத்தன.

Shantanu Hazarika Open Talks about Shruthi Haasan Here are the details

தனுஷுடன் ஸ்ருதி ஹாசன்: ஏழாம் அறிவு பெற்றுக்கொடுத்த வரவேற்பை அடுத்து தமிழில் 3 படத்தில் நடிக்க கமிட்டானார் ஸ்ருதிஹாசன். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த அந்தப் படத்தில் பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, தனுஷின் மனைவி மூன்று காலகட்டத்திற்கான பக்குவத்தையும், உடல்மொழியையும் ஸ்ருதிஹாசன் தனது நடிப்பில் வெளிக்கொண்டு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ருதிஹாசன்.

கடைசியாக நடித்த படம்: தமிழில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கு மொழியில் தொடர்ந்து நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன். அந்தவகையில் அவர் 'வால்டர் வீரய்யா', 'வீரசிம்ஹா ரெட்டி' படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களையே பெற்றன. கடைசியாக கேஜிஎஃப் படத்தை இயக்கி இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் பிரபாஸை வைத்து இயக்கிய சலார் படத்தில் லீடு ரோல் செய்திருந்தார் ஸ்ருதி ஹாசன்.

ஹாலிவுட் வாய்ப்பு: இதனையடுத்து ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகியிருந்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் அந்தப் படத்திலிருந்து அவர் விலகியிருக்கிறார். இதற்கிடையே அவர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்துவந்தார். அவருடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிர்ந்துவந்த ஸ்ருதி; கமல் ஹாசனை சந்திக்கவும் வைத்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிரேக் அப்: ஆனால் திடீரென இரண்டு பேருக்கும் பிரேக் அப் ஆகிவிட்டதாக கடந்த சில நாட்களாகவே தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இருவரும் ஒருவரையொருவர் சோஷியல் மீடியாவில் அன்ஃபாலோ செய்துகொண்டனர். அதுமட்டுமின்றி தனது சமூக வலைதள பக்கத்திலிருந்து சாந்தனுவின் புகைப்படங்களையும் ஸ்ருதி ஹாசன் டெலிட் செய்துவிட்டார். இந்நிலையில் இதுகுறித்து சாந்தனுவிடம் கேட்கப்பட்டபோது அதற்கு பதிலளித்த அவர், "மன்னித்துவிடுங்கள். அதைப் பற்றி பேச விரும்பவில்லை" என்று ஒரு வட மாநில மீடியாவிடம் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X