விக்ரம் படத்தில் கமலின் ஜோடி…மகளை விட குறைந்த வயது… இதெல்லாம் ரொம்ப ஓவர் தான் !
சென்னை : கமல் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் கமலுக்கு ஜோடி இருக்கா ? என்று ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், கமலுக்கு ஜோடியாக நடிக்கும், நடிகைக்கு அவரது மகளைவிட குறைந்த வயது என்பது தெரியவந்துள்ளது.
ரசிகர்கள் இதுகுறித்து கமெண்ட்டுகளை இணையத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ்
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு துவங்கிய இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. ஜுன் 3ந் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், விக்ரம் படத்தின் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பு
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ். முதல் படத்திலேயே விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றார். இதையடுத்து, கைதி படத்தை இயக்கினார். முழுக்க முழுக்க ஆக்ஷன் சென்டிமென்ட் கலந்து உருவான இந்தப் படத்தில் லோகேஷின் தனித்துவமான இயக்கம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இது தான் கதை ?
விக்ரம் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் வருகிற மே 18ந் தேதி பிரான்ஸில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாக உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்ளும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு தமிழ் படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது இதுவே முதன்முறையாகும்.

இதெல்லாம் ரொம்ப ஓவர்
இந்நிலையில், விக்ரம் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடி இருக்கா ? என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், கன்னட நடிகை ஷான்வி ஸ்ரீவஸ்தவா கமலுடன் நடித்துள்ளார். வெறும் 29 வயதே ஆன அந்த நடிகை, 67 வயதான கமலுடன் ஜோடி போட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல் இருவருக்கு இடையே ரொமான்ஸ் காட்சிகளும் இருக்கிறதாம். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் இதெல்லாம் ரொம்ப ஓவர். தனது மகளைவிட குறைந்த வயது பெண்ணுடன் ரொமான்ஸ் தேவையா? என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











