கவர்ச்சியில் தாராளம் காட்டும் ஷான்வி ஸ்ரீவத்சவா … திக்குமுக்காடும் ரசிகர்கள்

சென்னை : கன்னட நடிகையான ஷான்வி ஸ்ரீவத்சவா படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் இருந்து அறிமுகமாகி பின், கன்னட திரையுலகிற்கு சென்று தனக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் ஷான்வி ஸ்ரீவத்சவா. கல்லூரி படிக்கும் போது இவருக்கு பட வாய்ப்புகள் வந்தன இதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் ஷான்வி.

Shanvi srivatvava new photoshoots

கார்த்திக் ரெட்டி இயக்கிய லவ்லி என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் வலம் வரத் தொடங்கினார். அந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பேசும் படியாகவும் இருந்தது.

அடுத்து இவரின் இரண்டாவது தெலுங்கு படமான அட்டாவில் நடித்தார். அந்த கதாபாத்திரம் இவருக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி இருந்ததால் இவரை பலரும் பாராட்டினார்கள். பின் சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் ரவுடி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்..

Shanvi srivatvava new photoshoots

அதே ஆண்டே கன்னட மொழி படத்தில் கால் பதித்தார் ஷான்வி. கன்னடத்தில் இவர் நடித்த முதல் திரைப்படம் சந்திரலேகா ஆகும். பின் 2015 ஆம் ஆண்டு மாஸ்டர் பிஸ் என்ற கன்னட மொழி படத்தில் நடித்ததற்காக சைய்மா விருதும் மற்றும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த படத்தின் மூலம் இவருக்கு கன்னட திரையுலகில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது.

Shanvi srivatvava new photoshoots

மேலும் இவர் நடித்த தாராக் படத்திலும் தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். இந்த படத்தில் தான் இவருக்கு சிறந்த நடிகைகான விருது கிடைத்தது. மேலும் ராஜ்குமார் மகன்களின் ஒருவரான சிவ ராஜ்குமார் நடித்த முப்தி திரைப்படம் வசூல் ரீதியாகவும் மற்றும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

Shanvi srivatvava new photoshoots

பிசியாக இருந்த போதும் தனது போட்டோஷுட் எடுத்து அதை அவ்வப்போது பதிவிடுவது இவரது வழக்கம். தற்போது இவர் படு கவர்ச்சியாக உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நடிப்பில் தாராளம் காட்டும் ஸ்ரீவத்சவா கவர்ச்சியில் படு தாராளத்தை காட்டியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடினர்.

Shanvi srivatvava new photoshoots

தற்போது இவர் அவனே ஸ்ரீமன் நாராயணா என்ற படத்தில் ஹீரோயின் ஆக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X