»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

விஜய்யுடன் பிரியமுடன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த கெளசல்யா, அதே விஜய் நடித்த திருமலைபடத்தில் அவரால் அக்கா என்று அழைக்கப்படும் ஓல்டு கேரக்டரில் நடித்தார். இதில் விஜய்க்கு ஜோதிகா ஜோடி.ரகுவரனுக்கு கெளசல்யா ஜோடி.

இந்தப் படத்தைத் தொடர்ந்து கெளசல்யாவுக்கு ஏகப்பட்ட அண்ணி, அம்மா கேரக்டர்கள் தேடி வரஆரம்பித்துள்ளன.

ரகுவரனின் ஜோடியாக நடித்ததால், சில ஓல்டுகளுக்கு ஜோடியாக நடிக்கக் கேட்டு நிறைய வாய்ப்புகள் கவுசல்யாவீட்டுக் கதவை தட்டியவண்ணம் உள்ளன.

இவற்றை ஏற்பதா, இல்லையா என்று பெரும் குழப்பத்தில் இருக்கிறார் கெளசல்யா. வந்தவரை லாபம் பார்க்கலாம்என்றால், இனிமேல் ஒரு படத்திலும் ஹீரோயினாக நடிக்க முடியாமல் போய் விடுமே என்ற பயம் கவுஸை குழப்பிவருகிறதாம்.

ஆனால், தமிழில் இனி ஹீரோயின் வேடமெல்லாம் கிடைக்காது என்பதால், கல்யாணம் ஆகும் வரை கிடைத்தரோல்களைச் செய்து பணம் ஈட்டுமாறு நெருக்கமானவர்கள் நெருக்குகிறார்களாம்.

என்ன செய்வது என்று தெரியாமல் பெங்களூரில் உள்ள தனது வீட்டில் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கும்கெளசல்யா, இதுவரை புதிதாக ஒரு படத்தையும் ஒத்துக் கொள்ளாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறாராம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil