ஹீரோயின்

By Staff

தமிழ் சினிமாவில் பஞ்சாபி நடிகைகளின் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. ஒரு காலத்தில் தெலுங்குநடிகைகள், பின்னர் மலையாளிகள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்தனர்.

இப்போது பஞ்சாபிகளின் காலம் போலிருக்கிறது. மும்பையில் இருந்து இழுத்து வரப்பட்ட சிம்ரன் பஞ்சாபி தான்.தமிழ் சினிமாவில் கடகடவென முன்னுக்கு வந்தவர் இவர்.

சமீபத்தில் டி.ராஜேந்தர் மும்பையில் இருந்து சார்மியை இழுத்து வந்தார். இவரது உண்மையான பெயர் ஷர்மிகெளர். இவரும் பஞ்சாபியே. இந்தியில் துணை நடிகையாக இருந்த இவரைப் பிடித்துக் கொண்டு வந்துசிலம்பரசனுக்கு ஜோடியாக்கினார் அப்பா டி.ஆர்.

இதையடுத்து சோனியா என்ற பெண்ணையும் மும்பையில் இருந்து கொண்டு வந்திருக்கிறார்கள். இவரும் பஞ்சாபிதான். வளர்ந்தது மும்பையில். அப்பா இருப்பது பெங்களூரில். கன்னடத்தில் இரு படங்களில் நடித்தவர்.தெலுங்கிலும் நுழைந்து பார்த்தவர். அங்கெல்லாம் தேறாமல் போனதால் தமிழுக்கு வந்திருக்கிறார்.

இப்போது இந்த சார்மியும் சோனியாவும் இணைந்து ஆகா, எத்தனை அழகு என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.இதில் சோனியா என்ற இன்னொரு நடிகையும் அறிமுகமாகிறார். சோனியாவுக்கும் சார்மிக்கும் இடையேஉடையைக் களைவதில் பெரும் போட்டியே நடந்துள்ளது.

படத்தை இயக்குனர் சரணிடம் உதவி இயக்குனராக இருந்த கண்மணி இயக்குகிறார். வித்யாசகர் இசைஅமைக்கிறார். கும்மாளம் படத்தில் நடித்த நடித்த மிதுன் தான் இந்தப் படத்தில் ஹீரோ.

காதல் அழிவதில்லைக்குப் பின் தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படத்தில் நடித்துவிட்டார் சார்மி. ஆனால்,அங்கெல்லாம் அவ்வப்போது போய் வருவேதாடு சரி. நிரந்தர ஜாகை கோடம்பாக்கத்தைத் தான். ஆகா, எத்தனைஅழகு படம் தவிர, காதல் கிசுகிசு படத்திலும், பி.வாசுவின் பெயர் சூட்டப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.

சார்மி கதை இப்படி இருக்க சோனியாவும் சில படங்களில் புக் ஆகியுள்ளார். கஸ்தூரிராஜா தயாரிக்கப் போகும்காதல் கொண்டேன் படத்தில் இவர் தான் ஹீரோயினாம்.

தமிழில் பஞ்சாப் அலை வீசிக் கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X