இப்படி இறங்கிட்டாங்களே.. பலா மர பின்னணி.. கர்சீப்பில் மேலாடை அணிந்து பிரபல நடிகை போட்டோஷூட்!
சென்னை: பிரபல நடிகை கைக்குட்டையில் மேலாடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் கம்மாட்டி பாடம், பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் படங்களில் நடித்தவர், பெங்களூரைச் சேர்ந்த ஷான் ரோமி.
இவர் அடிக்கடி ஹாட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருவது வழக்கம்.

கிளாமர் போட்டோ
தற்போது கொரோனா லாக்டவுன் நடந்து வருவதால், நடிகைகள் தங்கள் வீடுகளில் இருந்தபடி, சமையல், ஒர்க் அவுட், நடனம் உள்ளிட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். சிலர் தங்களது த்ரோபேக் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதில் பல நடிகைகள் ஓவர் கிளாமர் போட்டோக்களை பதிவிடுவதும் வழக்கம்..

கைக்குட்டை மேலாடை
இதற்கு ரசிகர்கள் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தாலும் அவர்கள் கண்டு கொள்வதில்லை. தொடர்ந்து அதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்காக ஸ்பெஷல் போட்டோ ஷூட்டும் நடத்துகின்றனர். இந்நிலையில் நடிகை ஷான் ரோமி, கைக்குட்டையில் மேலாடை அணிந்து எடுத்துள்ள புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

டூபீஸ் உடைகள்
இந்த ஸ்பெஷல் போட்டோ ஷூட்டை, குவாரன்டைன் நேரத்தில் நடத்தியுள்ளார். பின்னணியில் பலா மரத்தில், பலாக்காய்கள் தொங்குகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்டிருந்த டூபீஸ் உடைகள் வைரலான நிலையில், இப்போது கைக்குட்டையை மேலாடையாக அவர் அணிந்திருக்கிற புகைப்படங்கள் பரபரப்பாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் கிண்டலாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பலா மரங்கள்
'இப்படியொரு பின்னணியில் உங்களை போட்டோ எடுக்க சொன்னது யார்?' என்று சிலர் கேட்டுள்ளனர். வெறும் கைக்குட்டையில மேலாடையா? நாங்க வேணா துண்டு தரவா? என்று சிலர் கலாய்த்துள்ளனர். நீங்க பெங்களூர்ல இருக்கீங்க? அங்க இப்படி பலா மரங்கள் கிடையாதே. கேரளாவுல எடுத்த போட்டோதானே இது? என்று ஒருவர் கேட்டுள்ளனர்.
Recommended Video

வேற லெவல் அழகு
இன்னும் சிலர் அவர் அழகை வர்ணித்துள்ளனர். நீங்க வேற லெவல் அழகு என்றும் ஒரு கைக்குட்டையில எப்படி மேலாடை அணிஞ்சீங்க? என்றும் சிலர் கேட்டுள்ளனர். ஒருவர் உங்க வயசு என்ன? இன்னும் சின்னப்பிள்ளை மாதிரியே இருக்கீங்களே? என்று கேட்டுள்ளார். இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











