இவங்க தான் உமன் ஆஃப் தி இயராம்.. பிரபல நடிகைக்கு She India பத்திரிகை கொடுத்த அட்டைப்பட அங்கீகாரம்!
சென்னை: நடிகை அமலா பாலுக்கு ஃபேஷன் மேகஸின் ஆன She India பத்திரிகை ஆண்டின் சிறந்த பெண்மணி என்ற அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறது.
Recommended Video
சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால் நடிப்பில் கடைசியாக ஆடை படம் வெளியானது.
அதோ அந்த பறவை படத்தின் ரிலீஸ் இப்போ, அப்போ என தள்ளிப் போய்க் கொண்டிருந்த நிலையில், லாக்டவுனால் ஒரேடியாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

முதலாம் ஆண்டு
பிரபல ஃபேஷன் இதழான She India தனது முதலாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை இந்த ஜூன் மாதம் கொண்டாடி வருகிறது. பெண்களுக்கான உடற்பயிற்சி, ஷாப்பிங், வாழ்க்கையில் போராடி முன்னேறிய பெண்களின் கதை உள்பட பல விஷயங்களை உள் அடக்கி இருக்கும் அந்த மாத இதழ், அமலா பாலுக்கு இப்படியொரு அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறது.

உமன் ஆஃப் தி இயர்
ஒரு படத்தில் கிட்டத்தட்ட பாதி படத்துக்கும் மேலாக ஆடை ஏதும் அணியாமல் முழு நிர்வாணமாக இந்தியளவில் எந்த முன்னணி நடிகையும் இதுவரை நடித்ததில்லை. அந்த அளவுக்கு துணிச்சலுடன் நடித்த அமலா பாலை பாராட்டி கடந்த ஆண்டின் சிறந்த பெண்மணி என்ற அந்தஸ்த்தை She India மேகஸின் வழங்கி அட்டை படத்தில் அமலா பாலின் புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறது.

யானையின் மரணத்திற்கு
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலா பால் சமீபத்தில் நாட்டையே உலுக்கிய கேரள யானை கொலை சம்பவத்துக்கு தனது சூடான கண்டனத்தை தெரிவித்து இருந்தார். யானைக்கு செய்ததை போல, அந்த நபர்களுக்கும் அவர்களின் மர்ம உறுப்புகளில் வெடியை போட்டுக் கொல்ல வேண்டும் என கொதித்தெழுந்தார்.

வித விதமாக
லைட் பல்புகளை வைத்துக் கொண்டும், ரேடியம் மேக்கப் உடன் முகத்தில் நிலா நட்சத்திரம் தெரிவது போலவும் வித்தியாசமான பல புகைப்படங்களை இந்த லாக்டவுனில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை அமலா பால். மேலும், ஒஷோ உள்ளிட்டோரின் புத்தகங்களையும் படித்து தத்துவ மெசேஜ்களையும் சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











