»   »  ஜில் மீன் ஷீலா!

ஜில் மீன் ஷீலா!

Subscribe to Oneindia Tamil

ஜில் மீன் ஷீலா படு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். தமிழில் அல்ல, தெலுங்கில்.

செம்மீன் ஷீலா அந்தக் காலத்தில் ரசிகர்களைக் கலக்கினார். இப்போது இள மீன் ஷீலா, தமிழ், தெலுங்குரசிகர்களை சந்தோஷக் கடலில் ஆழ்த்தி வருகிறார்.

குட்டிப் பாப்பாவாக பல படங்களில் நடித்தவர் ஷீலா. சூர்யாவின் தங்கச்சியாக நடித்த நந்தா படம்தான் குட்டிப்பாப்பாவாக ஷீலா நடித்த கடைசிப் படம். அதன் பிறகு அவர் நாயகியாகி விட்டார்.

ஷீலா நாயகியாக நடித்த முதல் படம் இளவட்டம். படு கிளாமராக, பரவசப்படுத்தி நடித்திருந்த ஷீலாவுக்குதமிழில் பெரிய வாய்ப்புகளை வாங்கித் தராவிட்டாலும் கூட சொல்லிக் கொள்ளும்படியாக சில படங்களைவைத்துள்ளார் ஷீலா.

வீராசாமியில் டி.ராஜேந்தரின் தங்கச்சியாக நடித்தார். இப்போது சீனாதானா 001 படத்தில் பிரசன்னாவுக்கு ஜோடிபோட்டு அசத்தி வருகிறார். இப்படத்தில் ஷீலா கண்ணைப் பறிக்கும் வகையிலான காஸ்ட்யூம்களில் படுகெறக்கமாக வந்துபோகிறாராம்.

தமிழில்தான் ஸ்டார்ட்டிங் டிரபுள். ஆனால் தெலுங்கில் ஷீலாவுக்கு மார்க்கெட் படு வேகமாக பிக்கப் ஆகிவருகிறது. இளவட்டம் படம் தமிழ்ப் படமாக இருந்தாலும், சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமானதால்,தெலுங்கில் டப்செய்து அங்கு முதலில் வெளியிட்டார்கள்.

தெலுங்கு ரசிகர்களுக்கு ஷீலாவின் ஜில் கவர்ச்சி ரொம்பவேப் பிடித்துப் போய் விட்டது. மூக்கழகி ஷீலாவின்முத்தாய்ப்பு கவர்ச்சியில் அவர்கள் கிறங்கிப் போகவே இப்போது நிறைய தயாரிப்பாளர்கள் ஷீலாவைத் தேடிவரஆரம்பித்துள்ளனராம்.

சித்திரம் பேசுதடி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். அதில் பாவனா நடித்த வேடத்தில் ஷீலாதான்நடிக்கிறாராம். தமிழில் கிளாமர் கலக்காத ரோல் பாவனாவுக்கு. ஆனால் ஷீலாவுக்கு செமையான கிளாமர்வேடமாம். இதுதவிர மேலும் சில படங்களும் கையில் இருக்கிறதாம்.

தமிழ், தெலுங்கு இரண்டிலும் சொல்லிக் கொள்ளும்படியான படங்களை வைத்திருக்கும் ஷீலா படு பிசியாக,ரசிகர்களின் கலைப் பசியைத் தீர்க்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறாராம்.

திரையுலக தானத்தில் சிறந்தது கிளாமர் தானம், அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார் ஷீலா!.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil