வாங்கி ஆடும் ஷீலா!

By Staff

இளமை துள்ளும் நாயகிகளில் ஷீலா படு விவரமாக இருக்கிறார். அவரது அப்ரோச்சே படு அசத்தலாக இருப்பதுதான் தொடர்ந்து அவருக்கு படங்கள் கிடைப்பதன் பரம ரகசியமாம்.

சின்னப் புள்ளையாக இருந்தபோதிலிருந்தே நடித்துக் கொண்டிருப்பவர் ஷீலா. நந்தாதான் கடைசியாக ஷீலா நடித்த சின்னப்புள்ளைப் படம். அதற்குப் பிறகு அவரது இளமை பூத்து, வாலிபம் துளிர் விட்டு விட்டதால், போஷாக்கு கூடும் வரை வீட்டோடு இருந்தார்.

அதன் பின்னர் புத்தம் புதிய பொலிவோடு, இளவட்டம் படம் மூலம் நாயகி ஆனார். இளவட்டம் படத்தை விட அதில் ஷீலா போட்ட கிளாமல் கிளுகிளுப்பாட்டம்தான் ரசிகர்களுக்கு படு நாட்டத்தை ஏற்படுத்தியது.

ஷீலாவுக்குள் பொன்னூஞ்சல் ஆடிக் கொண்டிருந்த இளமை திமிறல், இளவட்டம் மூலம் வெளிப்பட்டதும், அவரது திறமையை உணர்ந்த தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் ஷீலா பக்கம் கவனத்தைத் திருப்பினர்.

ஆந்திரத்து அனார்கலியான ஷீலாவின் கையில் இப்போது கண்ணா, சீனா தானா, வேதா என மூன்று படங்கள் உள்ளன. இதுதவிர மலையாளத்தில் ஒரு படம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. தெலுங்கிலும் 2 படங்கள் உள்ளாம். கன்னடத்திலும் நடிக்கப் போகிறாராம்.

சித்திரம் பேசுதடி தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் ஷீலாதான் நாயகியாக அசத்தப் போகிறாராம். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் கால் பதிப்பதால், பரவசமாகிக் கிடக்கிறார் ஷீலா.

டி.பி.கஜேந்திரன் இயக்கத்தில், பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்து வரும் சீனா தானா படம் மலையாளத்தில் வெளியான சிஐடி மூசா படத்தின் ரீமேக். இதில் ஒரு குத்துப் பாட்டு வருகிறதாம்.

இந்தக் குத்துப் பாட்டுக்கு கும்மாளமான ஒரு அழகிையக் கூட்டி வந்து கும்மியடிக்க வைக்கலாம் என கஜேந்திரன் நினைத்துள்ளார். ஆனால் அவருக்கு முன்பு ஓடி வந்து நின்ற ஷீலா, என்னத்துக்கு தனி அழகியெல்லாம்?. உங்களுக்கு எப்படி ஆட வேண்டும் என்று சொல்லுங்க, நானே சீரும், சிறப்புமாக சிலிர்த்துக் கொடுக்கிறேன் என்று குத்தாட்ட வாய்ப்பை வாங்கி அவரே ஆடிக் கொடுத்தாராம்.

சும்மா சொல்லக் கூடாது, தனி ஆட்ட தாராள நாயகிகளுக்கு சவால் விடும் வகையில், படு ஜாலியாக சிலம்பியிருக்கிறாராம் இந்தப் பாட்டில் ஷீலா. கூட ஆடிய பிரசன்னதாதான் விக்கித்துப் போய் விட்டாராம்.

குத்தாட்டத்தை கேட்டு வாங்கி ஆடியதற்கு ஷீலா சொல்லும் காரணம் படு சுவாரஸ்யமானது, கில்லாடித்தனமானது. ஏற்கனவே படத்தில் 2 ஹீேராக்கள். எனது கேரக்டர் ரொம்பவும் சின்னது. இதில் குத்துப் பாட்டுக்கு வேறு நடிகையை ஆட விட்டால் எனது பாத்திரத்தின் முக்கியத்துவம் இன்னும் குறைந்து போய் விடும்.

அதற்கு நாமே ஆடினால் கூடுதல் கவனிப்பும் கிடைக்கும், கிளாமர் நாயகிகள் நமது கேரக்டரை இருட்டடிப்பு செய்வதும் தவிர்க்கப்படும். நடிகையாக இருந்தால் குமுறல் நடிப்புக்கும் பொருந்தனும், குத்தாட்டத்திலும் குமுறனும். என்ன நான் சொல்றது? என்கிறார் ஷீலா.

இப்ப தெரியுதா, ஷீலா காட்டில் பெய்யும் மழைக்குக் காரணம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X