காருக்கு ரூ. 4 கோடி, ஆனால் நிவாரண நிதிக்கு லட்சமா?: நடிகர்களை விளாசும் சீனியர் நடிகை

By Siva

சென்னை: கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் மலையாள நடிகர்களால் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு சில லட்சங்கள் மட்டும் தான் கொடுக்க முடியுமா என்று சீனியர் நடிகை ஷீலா விளாசியுள்ளார்.

கேரளாவில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதித்த கேரளாவுக்கு தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் நிவாரண நிதி அளித்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்தும், நடிகர் ராகவா லாரன்ஸும் தலா ரூ. 1 கோடி அளித்தனர். பிற நடிகர்கள் லட்சங்களில் நிவாரண நிதி அளித்தனர்.

லட்சங்கள்

லட்சங்கள்

மலையாள நடிகர்கள் லட்சங்களில் நிவாரண நிதி அளித்தனர். இதை பார்த்த சீனியர் நடிகை ஷீலா கோபம் அடைந்துள்ளனர். எந்த ரசிகர்களின் காசில் ஆடம்பரமாக வாழ்கிறார்களோ அதே ரசிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளபோது தாராளமாக நிதி அளிக்கக் கூட இந்த மலையாள நடிகர்களுக்கு மனது வரவில்லையே என்று கொந்தளித்துள்ளார் ஷீலா.

ஷீலா

ஷீலா

முன்னணி மலையாள நடிகர்கள் வைத்திருக்கும் ஆடம்பர கார்களின் விலை ரூ. 4 கோடி. காருக்கு ரூ. 4 கோடி செலவு செய்யும் அவர்களால் தங்களை வாழ வைக்கும் ரசிகர்களுக்காக சில கோடிகளை கொடுக்க முடியாதா?. வீடு, உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு மலையாள நடிகர்கள் அளித்த தொகை போதாது. அவர்கள் தாராளமாக நிதி அளித்திருக்கலாமே என்கிறார் ஷீலா.

சம்பளம்

சம்பளம்

கேரள அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்கள். நடிகர்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை அளித்திருக்கலாமே. நீங்கள் இந்த அளவுக்கு பெயரும், புகழுடனும் வாழ யார் காரணம்? தற்போது தத்தளிக்கும் அந்த ரசிகர்கள் தானே. அவர்களுக்கு உதவி செய்வது நம் கடமை அல்லவா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஷீலா.

நிதி திரட்டு

நிதி திரட்டு

அனைத்தையும் இழந்து விட்டு நடுத்தெருவில் நிற்கும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். நட்சத்திர கலைவிழா நடத்தி நிதி திரட்டி அதை அவர்களுக்கு அளிக்கலாம். இந்த நேரத்தில் நாம் தான் அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்று ஷீலா தெரிவித்துள்ளார். 1960, 70களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஷீலா. ரஜினியின் சந்திரமுகி படத்தில் கூட நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X