»   »  ஷீலா.. தங்கச்சி To

ஷீலா.. தங்கச்சி To

Subscribe to Oneindia Tamil

ஷீலா. பல படங்களில் இவரைப் பார்த்திருப்பீர்கள்.

ஹீரோவுக்கு தங்கச்சியாக அல்லது ஹீரோவுக்கு தங்கச்சியாக வருவார். அதுவும் இல்லாவிட்டால் ஹீரோயின் உடன் படிக்கும்சிறுமியாக அல்லது பக்கத்து வீட்டுப் பெண்ணாக நடித்திருப்பார். இந்த ரோல்களை செய்பவர்கள் பெரும்பாலும் முன்னுக்கு வரமுடிவதே இல்லை.

அப்படியே இந்தத் தங்கச்சிகள், அக்காவாகி, அம்மாவாகி புரமோஷன் கிடைத்து போய்க் கொண்டே இருப்பார்கள்.சினிமாவோடு டிவிப் பக்கமும் போய் அழுவாச்சி சீரியல்களில் கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பார்கள்.


இவர்களில் ஒரு சிலருக்கே ஹீரோயினாக வாய்ப்புக்கள் வரும். சமீப காலத்தில் அப்படி தோழியாக நடித்து முன்னுக்கு வந்துகலக்கிக் கொண்டிருப்பவர்களில் மிக முக்கியமானவர் த்ரிஷா.

முதலில் ஓரிரண்டு படங்களில் ஹீரோயினுடன் காலேஜுக்குப் போய்விட்டு ஐஸ்க்ரீம் பார்லரில் ஹீரோவும் ஹீரோயினும்கொஞ்சிப் பேசும்போது சைடில் நின்று வேடிக்கை பார்த்த த்ரிஷா இன்று தமிழ், தெலுங்கில் நம்பர் ஒன் ஆகிவிட்டார்.

அதே வகையில் சொர்ணமால்யாவுக்கும் அக்கா, தங்கச்சி ரோலில் இருந்து ஹீரோயின் வாய்ப்பு வந்தது. ஆனால் ஸாரி எனக்குகல்யாணம் ஆயிருச்சு...ஆனாலும் பரவாயில்லை என்ற அந்தப் படத்தில் மகா எசகுபிசான ரோலில் நடித்ததால் சொர்ணாவின்பெயர் தான் நாறியது. அந்தப் படத்துக்கு சென்சார் தடா போட்டுவிட்டதால் சொர்ணாவின் சினிமா வாழ்க்கையில் முன்னேற்றம்இல்லாமல் போய்விட்டது.

இப்போது இந்த வரிசையில் ஷீலா என்ற ஒரு ஹீரோயின் உருவாகியிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக தமிழுக்கு வந்தவர்இவர் பம்பாய் படத்தில் அரவிந்த்சாமிக்கு தங்கச்சியாக வந்தார்.

டும்..டும்..டும்.. படத்தில் ஜோதிகாவுக்கு தங்கச்சியாக நடித்தார். தொடர்ந்து பல படங்களில் அதே மாதிரியான ரோல்களில்நடித்து முடித்துவிட்ட ஷீலாவுக்கு நீண்ட போராட்டத்துக்குப் பின் இந்த ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ராஜராஜேஸ்வரி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இளவட்டம் என்ற படத்தில் தட்டுத்தடுமாறி தமிழ் பேசியவாரேஹீரோவாகிவிட்ட நவ்தீபுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அறிந்தும் அறியாமலும் படத்தின் வெற்றிக்குப் பின் நவ்தீப்புக்கு பல வாய்ப்புக்கள் வந்துள்ளன. அதில் ஒரு படம் தான் இது.

படத்தில் புதுமுகம் என்ற பெயரில் ஷீலாவை அறிமுகம் செய்கிறார்கள். அஜால் குஜால் புவனேஸ்வரி, அந்த காலத்துக்குஅஜால் குஜாலான குயிலி ஆகியோரும் நடிக்கிறார்கள்.


கதை, திரைக்கதை, வசனம் எழுத்தி படத்தை இயக்குவது ராஜராஜா. படத்தின் சூட்டிங் விசாகப்பட்டிணம் பக்கத்தில்தொடங்கிவிட்டது. பரபரப்பாக சூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது.

தங்கச்சி வேடங்களில் மிக அடக்க ஒடுக்கமாக நடித்த ஷீலா இதில் தனது பொறுப்பை உணர்ந்து கிளாமரிலும் வெளுத்துவாங்கிக் கொண்டிருக்கிறார் என்கிறது சூட்டிங் வட்டாராம். நல்லா இருந்தா சரிதான்..

Read more about: sheela becomes heroine
Please Wait while comments are loading...