Shakeela - குடித்துவிட்டு ஷகீலா அப்படி செய்வார்.. அதனால்தான் தாக்கினேன்.. வளர்ப்பு மகள் அதிரடி பேட்டி

சென்னை: நடிகை ஷகீலா மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழிலும் ஜெயம், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கி யூட்யூப் சேனலை நடத்திவருகிறார். மேலும் பல யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியையும் அளித்துவருகிறார். இந்த சூழலில் ஷகீலா மீது ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் விளக்கியிருக்கிறார்.

மலையாள திரையுலகில் 18+ திரைப்படங்களில் நடித்து வெகு பிரபலமானவர் ஷகீலா. சில்க் ஸ்மிதா பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் வந்த ஷகீலா சில்க் நடித்த படத்தின் மூலம்தான் அறிமுகமும் ஆனார். சில்க்குக்கு போட்டியாக பலர் ஷகீலாவை முன்னிறுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருகட்டத்தில் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டதால் அடுத்ததாக வந்த கவர்ச்சி நடிகைகள் ஷகீலாவுக்கு பின் நிலையிலேயே இருந்தனர். அப்படிப்பட்ட சூழலில் அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்துக்கொண்டே இருந்தன.

Sheethal Explains About Shakeela Controversy in Recent Interview

போட்டி: மலையாள ஸ்டார்களான மோகன் லால், மம்மூட்டி ஆகிய இரண்டு பேரும் படு பிஸியாக இருந்த நேரத்தில்கூட அவர்களின் படங்களுக்கு போட்டியாக திகழ்ந்தது ஷகீலா நடித்த படம். உதாரணமாக கின்னாரா தும்பிகள் என்ற படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அதனைப் பார்த்த ஒட்டுமொத்த மலையாள திரையுலகும் ஆச்சரியம்தான் பட்டது. முக்கியமாக மோகன் லால், மம்மூட்டி உள்ளிட்டோர் ஷகீலாவின் படங்களுக்கு எதிராக பல சூழ்ச்சி வேலைகளை பார்த்ததாகவும் ஒரு பேச்சு பல காலமாகவே உண்டு.

ஒதுங்கிய ஷகீலா: ஷகீலா தனது வாழ்க்கையில் ஏகப்பட்ட காதல் தோல்விகளை சந்தித்தவர். அதனை அவரே சொல்லியும் இருக்கிறார். சமீபத்தில்கூட ஒரு தகவலின்படி அவர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் மீது சிறு வயதில் காதலில் இருந்ததாகவும் பேச்சு ஒன்று ஓடியது. காலங்கள் செல்ல செல்ல ஷகீலாவிற்கான பட வாய்ப்புகள் குறைந்தன. இதனையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்துவருகிறார். சொந்தமாக யூட்யூப் சேனலையும் நடத்திவருகிறார்.

வளர்ப்பு மகள்: இந்த சூழலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு தன் மீது பிறருக்கு இருந்த பார்வையை மாற்றிக்காட்டினார். அந்த சமயத்தில் ஷீத்தல் என்ற திருநங்கையை தனது வளர்ப்பு மகளாக ஏற்றுக்கொண்டார் ஷகீலா. அவரது செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அவருக்குள் இப்படி ஒரு குணம் இருப்பதை பார்த்து சந்தோஷம்தான் அடைந்தார்கள்.

தாக்குதல்: ஆனால் இப்போது ஷகீலா - ஷீத்தல் ஆகியோரின் உறவுக்கு இடையே பிரிவு ஏற்பட்டிருக்கிறது. ஷகீலா மீது ஷீத்தல் கடுமையான தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறார். அதுமட்டுமின்றி ஷகீலாவின் வழக்கறிஞர் மீது அவர் தாக்குதல் நடத்தியதாகவும் புகார் அளிக்கப்பட்டது. தாய் - மகளுக்குள் அப்படி என்னதான் பிரச்னை என்று பலரும் கேள்விகளை கேட்க தொடங்கினார்கள்.

ஷீத்தல் பேட்டி: இந்நிலையில் ஷகீலா மீது எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து மகள் ஷீத்தல் பேசுகையில், ""ஷகீலா குடி போதையில் எனது தாய் மற்றும் சகோதரி குறித்து மோசமாக பேசினார். அதனால்தான் சண்டை வந்தது. தினமும் குடித்துவிட்டு வந்து என்னை ஷகீலா கடுமையாக தாக்குவார். அவர் என்னை முதலில் அடித்தார். அதனால்தான் நான் திருப்பி அடித்தேன். பிறகு அவரது வழக்கறிஞர் சமாதானம் பேச வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து எங்களது தலைமுடியை பிடித்துக்கொண்டார். அதன் காரணமாகத்தான் எனது அம்மா அவரை கடித்தார்"" என்று தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X