செல்லம்மா அம்மாவைத் தெரியும்.. ஷெல்லி கிஷோரைத் தெரியுமா...?

By Sudha

சென்னை: பெரும்பாலும் ஹீரோ, ஹீரோயின் ஆகியோரைத்தான் திரையில் பலரும் விழி விரிய பார்த்திருப்பார்கள்.. ஆனால் சைடில் நடிக்கும் பலர் கவனிக்கப்படாமலேயே போய் விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஷெல்லி கிஷோர்.

தங்கமீன்கள் படத்தைப் பற்றியும், அந்தப் படத்தின் கதையைப் பற்றியும், இயக்குநர் ராம் பற்றியும், அந்தக் குட்டிப் பாப்பா பற்றியும்தான் நிறை பேசினர்.. ஆனால் குட்டிப் பாப்பாவின் அம்மா வடிவை நிறையப் பேர் வசதியாக மறந்து விட்டனர்.

அந்த வடிவின் பெயர்தான் ஷெல்லி கிஷோர். மலையாளத்து நடிகை. அருமையான நடிகை, அழகான டான்ஸர்.. என்று பல விஷயங்கள் இவரிடம் புதைந்து கிடக்கின்றன.

துபாயிலிருந்து பத்மப்ரியா வழியாக

துபாயிலிருந்து பத்மப்ரியா வழியாக

பிறப்பு கேரளா என்றாலும் கூட துபாயில்தான் இவர் வளர்ந்துள்ளார். நடிகை பத்மப்ரியா இவருக்கு நல்ல தோழியாம். அவர் மூலம்தான் தங்கமீன்கள் வாய்ப்பும் கிடைத்ததாம்.

புன்னகை இளவரசி

புன்னகை இளவரசி

எப்படி நம்ம ஊரில் சினேகாவுக்கு புன்னகை இளவரசி என்று பெயர் வைத்து செல்லம் கொஞ்சுகிறார்களோ அதே போல ஷெல்லிக்கு அவரது சுற்றமும், நட்பும் அந்தப் பெயரை இட்டு சந்தோஷிக்கிறார்கள். சும்மா சொல்லக் கூடாது.. ஷெல்லி சிரித்தால் சில்லுன்னுதான் இருக்கு.

நிறைய நடிக்கனும்.. வீணை வாசிக்கனும்

நிறைய நடிக்கனும்.. வீணை வாசிக்கனும்

ஷெல்லிக்கு இப்போது தங்க மீன்கள் மூலம் நிறைய வெளிச்சம் கிடைத்துள்ளதாம். இதனால் சினி்மாவில் விதம் விதமான கேரக்டர்களில் நிறை நடிக்கப் போவதாக கூறுகிறார். அதேபோல வீணை வாசிக்க வேண்டும் என்பதும் இவரது ஆசைகளில் ஒன்றாம். கத்துக்கப் போகிறாராம்.

டிவியில் பிரபலம்

டிவியில் பிரபலம்

மலையாளத்தில் வெளியான குங்குமப்பூவு என்ற சீரியலில் இவர் ஷாலினி என்ற வேடத்தில் நடித்துப் பிரபலமானவரும் கூட. கேரளா கபே உள்ளிட்ட சில மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.

மலையாளத்துக்கு தமிழ் பரவாயில்லை

மலையாளத்துக்கு தமிழ் பரவாயில்லை

தமிழ்த் திரையுலகம் குறித்து ஷெல்லி கூறுகையில், மலையாளத்தில் நிறைய நடிகைகள் உள்ளனர். ஆனால் அத்தனை பேருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் தமிழ்த் திரையுலகம் திறமைசாலிகளை வாரியணைத்துக் கொள்கிறது என்று பூரிக்கிறார்.

ஆமாமா.. குறிப்பாக கேரளாவிலிருந்து வந்தா எங்காளுங்க விட மாட்டாங்க... அள்ளிக்குவாங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X