நயனுக்குப் பதில் ஷெரீன்!

By Staff

கஜினி இந்தி பதிப்பில் நயனதாரா நடித்த கேரக்டரில் ஷெரீன் நடிக்கவுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவின் சூப்பர் நடிப்பில் வெளிவந்து பரபரப்பைஏற்படுத்திய கஜினி இப்போது இந்திக்குப் போகிறது. அமீர்கான் சூர்யா வேடத்தில்நடிக்கிறார்.

இதில் தமிழில் ஆசின் நடித்த வேடத்தில் முதலில் அவரே நடிப்பதாக இருந்தது.ஆனால் திடீரென ஆசினை தூக்கி விட்டனர். இதனால் இந்தியிலும் சிந்து பாடலாம்என காத்திருந்த ஆசின் கடும் அதிர்ச்சி ஆகி விட்டார்.

இதேபோல நயனதாராவின் கேரக்டரிலும் அவரையே நடிக்க வைக்கலாமா என்றுமுதலில் யோசித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது நயனதாராவும்நடிக்கவில்லையாம். அவருக்குப் பதில் காந்தக் கண் அழகி ஷெரீன் நடிக்கவுள்ளாராம்.

துள்ளுவதோ இளமை மூலம் துள்ளிக் குதித்து வந்த ஷெரீன் தமிழில் எடுபடாமல்போய் விட்டார். சொற்ப படங்களுடன் மார்க்கெட்டை மூடிய கையோடு,மலையாளத்திலும், கன்னடத்திலும் தனது அதிர்ஷ்டத்தைப் பரீட்சித்துப் பார்த்தார்.அங்கும் சரிப்பட்டு வரவில்லை.

இதனால் விளம்பரப் படங்களில் நடிக்க போனார் ஷெரீன். இப்போது அவரைத் தேடிஇந்திப் பட வாய்ப்பு வந்துள்ளதால் படு குஜாலாகியுள்ளார். அதிலும் அமீர்கானுடன்நடிக்கும் வாய்ப்பு என்பதால் கூடுதல் மஜாவாக இருக்கிறாராம்.

இந்தப் படத்தின் மூலம் இந்தித் திரையுலகில் முத்திரையைப் பதித்து விட வேண்டும்என்று படு ஆவலாக இருக்கிறார். தமிழில் நயனதாராவுக்கு நிறைய கிளாமர்காட்சிகளை வைத்திருந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் அந்தக் காட்சிகளைவெட்டி விட்டு படத்தை அடக்க ஒடுக்கமாக வெளியிட்டார்கள்.

ஆனால் இந்தியில் கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்களாம். எனவேஷெரீனுக்கு அப்படியாப்பட்ட திறமையைக் காட்டவும் அமோக வாய்ப்புகள்உள்ளது.

துள்ளி விளையாட ஷெரீனும் தயார்தானாம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X