»   »  டேஞ்சரான ஷெரீன்!

டேஞ்சரான ஷெரீன்!

Subscribe to Oneindia Tamil

ஷெரீன் நடித்துள்ள தெலுங்குப் படமான டேஞ்சர் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

துள்ளுவதோ இளமையில் அறிமுகமாகி இளசுகளின் இதயங்களை துள்ள வைத்தவர் ஷெரீன். அவரது அட்டாக்அழகு, ரசிகர்களை அவுட் ஆக்கி விட்டது. தொடர்ந்து விசில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார் ஷெரீன்.

ஆனால் இடையில் காதல் வயப்பட்டு வந்த வாய்ப்புகள் சிலவற்றை இழந்தார். அம்மாவுடன் கோபித்துக்கொண்டதால் மேலும் பல வாய்ப்புகளும் ஓடிப் போய் விட்டன.

இதனால் எங்குமே வாய்ப்பு இல்லாமல் விளம்பரப் படங்களுக்கு நடிக்கப் போனார் ஷெரீனா. விளம்பரங்களில்படு பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஷெரீனை கூப்பிட்டு டேஞ்சர் என்ற படத்தில் நடிக்க வைத்தார் ரம்யாகிருஷ்ணனின் ஆத்துக்காரர் கிருஷ்ணவம்சி.

நர பலியை மையமாகக் கொண்ட கதைப் பின்னணியுடன் கூடிய படம் டேஞ்சர். ஆந்திராவில் வெற்றிகரமாகஓடிய இப்படத்தை இப்போது தமிழுக்குக் கொண்டு வருகின்றனர்.

முதல்வர் பதவியைப் பிடிக்கும் ஆசையில் ஒரு அமைச்சர் நரபலிக்கு முயற்சிக்கிறார். குழந்தையைக் கடத்தி வந்துகாட்டுக்குள் வைத்து நரபலி கொடுக்க முயற்சிப்பதை படமாக்கி விடுகிறார்கள் சில கல்லூரி மாணவர்கள்.

இதை அறிந்த அந்த அமைச்சர் மாணவர்களை வேட்டையாடி அந்த வீடியோ ஆதாரத்தைப் பறிக்கமுயற்சிக்கிறார். அதை மாணவர்கள் எப்படி சமாளித்து முறியடிக்கிறார்கள் என்பதுதான் கதை.

கல்லூரி மாணவியாக ஷெரீன் நடித்துள்ளார். அவருடன் ஸ்வேதா, குறும்பு படத்தில் ஹீரோவாக நடித்த நரேஷ்ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஷெரீனின் டிரேட் மார்க் கவர்ச்சியும் இப்படத்தில் தெளிவாக இடம்பெற்றுள்ளதாம். இப்படத்தை தமிழில் டப்செய்து வெளியிட்டால் தனக்கு நல்ல பிரேக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் ஷெரீன்.

இடையில் இருந்த தொய்வை சரி செய்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு அடிக்க ஷெரீன் புதிய முயற்சியில்இறங்கியுள்ளார். இதற்காக புது ஆல்பம் ஒன்றையும் ரெடி செய்து கோலிவுட்டில் உலாவ விட்டுள்ளார்.

வருக, வருக!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil