»   »  மும்பையில் குடியேறிய ஷெரீன்

மும்பையில் குடியேறிய ஷெரீன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
எங்கிருந்து வந்தாரோ அதே மாடலிங்குக்குத் திரும்பிப் போய்விட்டார் ஷெரீன்.

சான்ஸ் வாங்கிக் கொடுத்தால் 10 சதவீதம் வரை கமிஷன் தருகிறேன் என்று கூறு போட்டு கத்திரிக்காய் விற்பது மாதிரி கூவிக் கூவிமார்க்கெட்டிங் செய்தும் ஷெரீனுக்கு தமிழில் எந்தப் புதுப்பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இவரது மாஜி காதலர் ரோஹன் தனது சொந்தப் பணத்தில் திருடிய இதயத்தை என்ற ஒரு தமிழ்ப் படத்தை தானே தயாரித்து, ஹீரோவாகநடித்தார். அதில் ஜோடியாக நடிக்கக் ஷெரீனை கூப்பிட்டதும் அதற்கு ஷெரீன் நோ சொன்னதும் பழைய செய்தி.

ஷெரீனுக்குத் தரப்பட்ட ரோலில் சுபா புஞ்சா புகுந்து விளையாடினார். பதிலுக்கு ரோஹனை கடுப்பேற்ற காதல் திருடாவில் குணாலோடுகுஜாலாக நடித்தார் ஷெரீன்.

இந்த இரண்டு படங்களின் சூட்டிங்களும் முடிந்துவிட்டன. வாங்கத் தான் ஆள் இல்லை. இதனால் இந்த இரு படங்களும் பெட்டியில் ஆழ்ந்தகுறட்டை போட்டு வருகின்றன.

காதலன் ரோஹன் பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாகக் கூறும் ஷெரீன் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் எனபல மொழிகளிலும் வாய்ப்பு தேட மீடியேட்டர்களைப் போட்டார்.

அவர்களுக்கு தான் நாம் முதல் பாராவில் சொன்ன 10 சதவீத கமிஷன் பேசினார். ஆனால், எந்த வாய்ப்பும் வந்தபாடில்லை. இதனால்பெங்களூருக்குப் போய் படிப்பைத் தொடரப் போகிறேன் என்று கோலிவுட்டில் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

பெங்களூரில் போய் படிப்பைத் தொடர்ந்தாரோ இல்லையோ தனது சொந்த ஊர் என்பதால் கன்னடத்தில் வாய்ப்பு தேடினார். அங்கும்தோல்வியே.

இதையடுத்து மீண்டும் மாடலிங் உலகிலேயே புகுந்துவிட்டார் ஷெரீன்.

பெங்களூர்- மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தபோது தான் அவரை கஸ்தூரிராஜா-செல்வராகவன் ஆகியோர் கண்டுபிடித்துதனுசுக்கு ஜோடியாக துள்ளுவதோ இளமையில் கோதாவில் இறக்கிவிட்டனர்.

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை கிரங்கடித்தவர், பின்னர் தானாகவே ஒழிந்தார்.

இப்போது தாயாருடன் மோதல், காதலனுடன் பிரிவு, சினிமா சான்ஸ்கள் வற்றிப் போனது என ஏகப் பிரச்சனைகள். இதனால் பெட்டி,படுக்கையோடு மீண்டும் மும்பையிலேயே குடியேறிவிட்டார். அங்கு தனது பழைய தொடர்புகளை வைத்து மாடலிங் வாய்ப்புக்களைத்தேடி வருகிறார்.

அதே நேரத்தில் அவருக்காக அவரது மீடியேட்டர்கள் கோலிவுட்டில் வாய்ப்பு வேட்டையை தொடர்ந்து நடத்திக் கொண்டேஇருக்கின்றனர். ஏதாவது ஒரு சின்ன ரோல் என்றாலும் பரவாயில்லை என்று இவர்கள் தயாரிப்பாளர்களைப் பார்த்து கோரிக்கை வைத்தபடிஇருக்கின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil