»   »  செரீன் போடும் குண்டு

செரீன் போடும் குண்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

செரீனுக்குப் படம் ஏதும் இல்லாத கவலை மனதில் இல்லை போலும். மனதளவில் படுஜாலியாகத்தான் இன்னும் இருக்கிறார் இந்த இளமை துள்ளும் நாயகி.

துள்ளுவதோ இளமை தொடங்கி, விசில், ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் 1, காதல் திருடாஎன கொஞ்சமே நடித்திருந்தாலும் கூட செரீன் நடித்த அத்தனை தமிழ்ப் படத்திலும்அவரது கிளாமர் களேபரம் ரொம்பத் தூக்கல்தான்.

இப்போது அம்மணி, மலையாளத்துக்குப் போய் விட்டார்.

மலையாளத்துக்குப் போய் விட்டார் என்றவுடன் அங்குள்ள ரசிகர்கள் செரீனின்கவர்ச்சி மழையில் நனையப் போகிறோர்களே என்று அவசரப்பட்டுபொறாமைப்படாதீர்கள்.


அங்கு அம்மணி கிளாமராக நடிக்க விரும்பவில்லையாம். வித்தியாசமானகேரக்டர்களில் நடிக்கப் போவதாக கூறி மலையாள ரசிகர்களின் வயிற்றில் புளியைக்கரைத்துள்ளார்.

ஏன் இப்படி, கிளாமர் புளிச்சுப் போச்சா என்று செரீனாவிடம் கேட்டபோது,அப்படியெல்லாம் இல்லை. இத்தனை நாட்களாக கிளாமராகத்தானே நடித்தேன்.இனிமேல் கிளாமர் மட்டுமல்லாது விதம் விதமான ரோல்களில் நடிக்கஆசைப்படுகிறேன்.

அதற்கேற்றார்போல மலையாளத்தில் ஒரு படம் வந்துள்ளது. அடித்துத் தூள் கிளப்பப்போகிறேன். அப்ப தமிழ்? அதிலும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன்.நடித்தபோது நான் படிப்பையும் விடாமல் தபால் மூலம் தொடர்ந்தேன்.


அது எனக்கு இப்போது கை கொடுத்துள்ளது. கையில் அழகான ஒரு பட்டம்இருக்கிறது. மலையாளத்திலும் வாய்ப்பு இல்லாமல் போனால் அடுத்து திருமணமாஎன்று வேகம் வேகமாக அடுத்த கேள்வியைத் தூக்கிப் போட்டபோது, என்னதுதிருமணமா? அதெல்லாம் இப்போ கிடையாது.

அந்த யோசனையே என்னிடம் இல்லை. 40 வயசாகட்டும் பார்க்கலாம் என்றுசாவகாசமாக குண்டைத் தூக்கிப் போட்டார் செரீன்.

40 வயசில் திருமணமா, என்னம்மா சொல்றீக என்று பேஸ்த் அடித்துப் போய்கேட்டபோது, எனக்கு ரம்யா கிருஷ்ணன்தான் வாழ்க்கையிலும், சினிமாவிலும் ரோல்மாடல்.


அவர் எப்போது திருமணம் செய்தார்? 40 வயதில்தானே! அதேபோலத்தான் நானும்.முடிந்தவரை நடிப்பேன், அப்புறம் அரசியலில் குதிப்பேன், மக்களுக்குச் சேவைசெய்வேன்.

அப்புறம்தான் கல்யாணம் குறித்து சிந்திப்பேன். அதற்குள் 40 வயதாகி விடும்அல்லவா? அதனால்தான் அப்படிச் சொன்னேன்.

செரீன் சொல்றது ஜோக்கா, சீரியஸான்னே தெரியலையே!

Read more about: sherin to marry after 40

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil