'சாப்ட்வேர்' ஷெரீன்

By Staff
Click here for more images
ஜில் ஜில் ஷெரீன், அடுத்ததாக ஒரு புதிய படத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக நடிக்கவுள்ளாராம்.

பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் இளமை நாயகி ஷெரீன். ஆனால் முதல் படத்திற்குப் பிறகு அவர் எடுபடவில்லை. சில பல குழப்பங்களில் சிக்கி முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் நடித்த உற்சாகம் திரைக்கு வந்தது. அந்தப் படத்தின் மூலம் ஷெரீனின் திரையுலக வாழ்க்கையில் புதிய உற்சாகம் பிறந்துள்ளதாம்.

அதாவது கை நிறையப் புதிய படங்கள் வந்துள்ளதாம். எஸ்.ஜே.சூர்யா இயக்கும் வில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் ஷெரீனுக்கு சாப்ட்வேர் என்ஜீனியர் வேடமாம். பின்னிப் பெடலெடுத்து வருகிறாராம்.

இதேபோல மலையாளத்திலும் அவர் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்தில் தனது நடிப்புக்கு கண்டிப்பாக சென்ட்ரல் அவார்டு நிச்சயம் என்ற நம்பிக்கையோடு உள்ளார் ஷெரீன். இந்தப் படம் தீபாவளிக்கு கேரளாவில் ரிலீஸ் ஆகிறதாம்.

இதைத் தொடர்ந்து தெலுங்கில் ஷாமுடன் ஜோடி போடுகிறார். படத்தின் பெயர் கேஷ் அண்ட் மாயா. இப்படத்திலும் நல்ல கேரக்டராம்.

நடிப்போடு தொடர்ந்து கிளாமரிலும் கலக்குவேன் எனறு புன்னகையோடு கூறுகிறார் முன்பை விட மெரு கூடிப் போயுள்ள ஷெரீன்.

More from Filmibeat

Read more about: sherin
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X