Bigg Boss 3 Tamil: பிக் பாஸ் 3 துள்ளுவதோ இளமை ஷெரின் அப்பவே அப்படி

Recommended Video

Bigg Boss 3 Tamil: Actress Sherin: தமிழக மக்களை கவர்த்த அழகிய அசுரா | Bigg Boss 3 Contestants

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் 3 சீசனில் போட்டியாளராக இருக்கும் துள்ளுவதோ இளமை ஷெரின் அப்பவே அப்படித்தான் என்று ஒரு அசிஸ்டென்ட காமெரா மேன் சொல்கிறார்.

அப்பவே அப்படின்னா எப்படின்னு கேட்கறீங்களா? அதாவது ரொம்ப சின்ன பொண்ணா இருக்கும் போதே நடிக்க வர்ல... அப்பவே ரொம்ப மெச்சூர்ட் டைப் பொண்ணுதான். அப்பவே வயசும் தனுஷை கம்பேர் பண்ணும்போது அவரை விட சுமார் ஒன்பது வயசுக்கு மேல பெரியவர் ஷெரின் என்று சொல்கிறார்.

பெங்களூர் பெண்ணான ஷெரின் ஆங்கிலோ இந்தியன் பொண்ணு என்று கூட சொல்கிறார்கள். துள்ளுவதோ இளமை படத்தில் காட்டுல மேட்டுலன்னு எங்க என்ன செய்ய சொன்னாலும் எதுவும் பேசாமல் செய்துடுவாராம்.

மென்மையான சருமம்

மென்மையான சருமம்

ஷெரின் வெள்ளை வெளேர்னு மென்மையான சருமத்துடன் இருப்பவர். துள்ளுவதோ இளமை படத்தில் பாதி படம் வயல் வெளி, காடு மேடு என்று சுத்தும் படம்தான். அசால்ட்டா ஜாலியா ஒத்துழைத்து, இருக்கறதை சாப்பிட்டு சமாளித்துக் கொள்பவராம். சில சமயம் முகம் வாடிப் போனாலும் கூட,அதை வெளியில் காமிக்கமல் சமாளிச்சு நடித்துக் கொடுத்தார் என்றும் சொல்கிறார்கள்.

ரொம்ப செல்லம்

ரொம்ப செல்லம்

துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் ரொம்பச் சின்ன பையன்.அவன் காடு, மலை என்று சுத்த வைப்பதையும் நினைத்தும் , அங்கங்க தூங்குவதைப் பாரித்தும் ஒரு அப்பாவா மனசுக்குள்ள ரொம்பவும் நொந்துதான் இருந்தார் படத்தின் இயக்குநர் கஸ்தூரி ராஜா. எல்லாப் பிள்ளைகளும் அதே ஏஜ் குரூப்பில் இருந்ததால் தனிப்பட்ட முறையில் பெரிதாக எதுவும் கவனிக்க வில்லையாம்.

ஷெரின் மீது

ஷெரின் மீது

ஷெரின் மீது மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தி பார்த்துக்க சொல்வாராம் தன்னுடைய உதவி இயக்குநர்களை.அதாவது அவருக்கு சின்ன புல் சருமத்தில் கீறினாலும் அந்த இடத்தில் ரேஷஸ் வந்து ரொம்ப அவஸ்தைப் படும் ஷெரின், சில சமயம் அழ கூட ஆரம்பிச்சுருவாராம். இதனாலேயே இந்த பெண்மீது மட்டும் சிறப்பு கவனம் எடுத்துக்கிட்டதா கஸ்தூரி ராஜா சொல்லி இருக்கார்.

துள்ளுவதோ இளமை ஷெரின்

துள்ளுவதோ இளமை ஷெரின்

பிக் பாஸ் வீட்டில்கூட துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த அதே ஷெரீனைத்தான் பார்க்கிறேன் என்றும், ஆனால்,போகப்போக மாற்றங்கள் தெரியலாம் என்று கஸ்தூரி ராஜா சொல்லி இருக்கார்.ஆனால்,பிக்பாஸ் வீட்டிலிருக்கும் ஷெரின் இவ்வளவு விரைவில் அடையாளம் தெரியாமல் இந்த அளவுக்கு மாறி விடுவார் என்று தான் நினைக்கவில்லை என்றும் கஸ்தூரி ராஜா சொல்லி இருக்கார்.

தனுஷ் கூறியது

தனுஷ் கூறியது

படம் வெற்றி பெற்றபோதே தனுஷ் கூறியது, யுவன் ஷங்கர் ராஜா இல்லை என்றால் துள்ளுவதோ இளமை படம் கிடையாது.துள்ளுவதோபடம் இல்லை என்றால் தனுஷ் கிடையாது. என்று சொன்னவர்,படத்தில் நடித்த காலங்களில் எங்களுடன் கூடவே இருந்த நடிகை ஷெரீனை மறக்க முடியாது என்றும் கூறி இருந்தார்.
துள்ளுவதோஇளமை படத்தில் தன் பெயரை காப்பாற்றிக் கொண்ட ஷெரின் பிக் பாஸ் வீட்டில் எப்படி இருப்பார்?

அழகிய அசுரா

அழகிய அசுரா

என்னதான் துள்ளுவதோ இளமை படம் வெற்றி அடைந்தாலும் அழகிய ஷெரீனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புக்கள் கிடைக்கவே இல்லை.ரீஎன்ட்ரியாக நடித்த படம்தான் விசில்.அதுவும் இவருக்கு கை கொடுக்கவில்லை.அழகிய அசுரா அசுரா அத்து மீற ஆசை இல்லையா என்று கவர்ச்சியாக இவர் கேட்டாலும் யாரும் இவருக்கு வாய்ப்பு தரவில்லை என்பதுதான் உண்மை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X