நீண்ட இடைவெளிக்குப் பிறகு.... உதயநிதியை 'ஒருதலையாய் காதலிக்கும்' ஷெரீன்!

By Shankar

துள்ளுவதோ இளமை ஷெரீனை நினைவிருக்கிறதா... பெரிய ரேஞ்சுக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டவர், மேனேஜருடன் காதல், அம்மாவுடன் மோதல் என ஏகப்பட்ட வில்லங்கங்களில் சிக்கி வாய்ப்புகளை இழந்து காணாமல் போனார்.

கடைசியாக இவர் நடித்து வெளிவந்த படம் 'பூவா தலையா'. அதன் பின்னர் நான்கைந்து ஆண்டுகள் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஒரு விபத்தில் கூட சிக்கினார். இடையில் சில தெலுங்குப் படங்களில் நடித்தார்.

நண்பேன்டாவில்...

நண்பேன்டாவில்...

இப்போது புதுமுக இயக்குனர் ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி, நடிகை நயன்தாரா ஜோடியாக நடிக்கும் 'நண்பேன்டா' படத்தில் நடிகை ஷெரீன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒருதலைக் காதல்

ஒருதலைக் காதல்

அவரது மறுபிரவேசத்தை இயக்குநர் ஜெகதீஷ் உறுதி செய்துள்ளார். உதயநிதி மீது ஒருதலைக் காதல் கொண்ட பெண்ணாக இதில் தோன்றுகிறாராம் ஷெரீன். ஷெரீன் -உதயநிதி தோன்றும் சில காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன.

திறமையான பெண்

திறமையான பெண்

ஷெரீன் நடிப்பது குறித்து இயக்குநர் ஜெகதீஷ் கூறுகையில், "நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் இந்தத் தமிழ்ப் படத்தில் நடித்து வருகின்றார். மிகவும் திறமை வாய்ந்த அவர் எங்களது குழுவில் இணைந்துள்ளது படத்துக்கு ஸ்பெஷலாகும்," என்றார்.

கும்பகோணத்தில்

கும்பகோணத்தில்

நண்பேன்டா படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றுயுள்ள இடங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஹீரோயின் நயன்தாரா கும்பகோணத்திலேயே கடந்த சில வாரங்களாக முகாமிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X