வேஷ்டி கட்டி.. தொடையை தட்டி.. ரசிகர்களை குஷிப்படுத்திய பிக் பாஸ் நடிகை!

சென்னை : பார்த்தவுடனேயே வசீகரிக்கும் கொள்ளை அழகையும், கொஞ்சும் மொழியையும் கொண்டு துள்ளுவதோ இளமையாக இன்றும் இளமையுடன் துள்ளிக்குதிக்கும் நடிகை ஷெரின்.

வழக்கமாக இவர் கிறங்க வைக்கும் கவர்ச்சிப்போட்டோகளிலும் சூடேற்றும் பிகினி புகைப்படங்களிலும் நம்மை ஆசுவாசப்படுத்தி வந்த இவர்.

தற்பொழுது வேஷ்டி சட்டையில் தனது தொடையை தட்டியவாறு போஸ் கொடுத்திருக்கும் மாஸ் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீழ்வேனென்று நினைத்தாயோ

வீழ்வேனென்று நினைத்தாயோ

பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் பல ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்தாத இவர் சமீபத்தில் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்றபடி மீண்டும் வந்து தன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

தோன்றவில்லை

தோன்றவில்லை

தமிழில் செல்வராகவனின் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர். ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி என தொடர்ந்து தமிழ் படங்கள் நடித்துக் கொண்டிருந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் பல படங்களில் இவர் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார். இந்நிலையில் தமிழில் கடைசியாக நண்பேன்டா என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதற்குப்பின் ஏனோ தெரியவில்லை தமிழ் படங்கள் எதிலும் இவர் தோன்றவில்லை..

கொஞ்சிக் குழவி

கொஞ்சிக் குழவி

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் சீசன் 3ல் இவர் பங்கேற்று பல சர்ச்சைகளில் சிக்கி மீண்டும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் மாடலும் நடிகருமான தர்ஷன் என்பவருடன் இவர் கொஞ்சிக் குழவியும் காதல் வயப்பட்டும் வந்தாக சொல்லப்படுகிறது . இந்நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் சிறப்பாக விளையாடி மேலும் பல ஆயிரம் ரசிகர்களை பெற்று நல்ல புகழையும் பெற்று 3வது ரன்னரப்பாக வந்தார். எனினும் இவர் மீது ரசிகர் வைத்துள்ள அன்பும் ஆதரவும் சிறிதளவும் குறையவில்லை.

படப்பிடிப்புகள்

படப்பிடிப்புகள்

இந்நிலையில் இவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து வந்தபின்பு இவரின் ரசிகர் கூட்டம் பல லட்சக்கணக்கில் உருவாகி இருந்தது . பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பல படங்களில் இவர் கமிட்டாகி உள்ளார் என சொல்லப்பட்டு வரும் நிலையில் தற்போது உள்ள சூழலில் படப்பிடிப்புகள் ஏதும் நடைபெறாததால் விதவிதமான போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மனதை தொடர்ந்து கொள்ளையடித்து கொண்டிருக்கிறார்.

தொடையை தட்டி

தொடையை தட்டி

இந்நிலையில் இவர் தற்போது பதிவிட்ட ஒரு மாஸ் போட்டோ ஒன்று அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது. பொதுவாக கவர்ச்சி உடைகளிலும் சேலை போன்றவற்றிலும் தோன்றும் இவர். தற்போது கருப்பு சட்டையுடன் வேஷ்டி கட்டியவாறு தோன்றிய அந்த போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் ஒரு போட்டோவில் கருப்பு சட்டை கருப்பு கண்ணாடி என மாஸாக தனது வேஷ்டியை தூக்கி தனது பளபளப்பான தொடையை தட்டியவாறு கொடுத்துள்ள போஸ் அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது. இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் இப்படி நீங்க ஒவ்வொரு நாளும் அழகாயிட்டே போனா எங்கள மாதிரி பசங்க எல்லாம் என்ன பண்றது என்றும், இது பிரேமம் லேடிஸ் வெர்ஷன் என்றும் அந்த போட்டோவை ரசித்தபடி பீல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X