twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செகண்ட் இன்னிங்ஸை தொடங்கிய தனுஷ் பட நடிகை... விரைவில் திரைக்கு வரும் புதிய படம்!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தனுஷ் பட ஹீரோயின் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.

    கன்னட நடிகையான ஷெரின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்தப் படத்தில் பள்ளி மாணவியாக தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷெரின்.

    தொடர்ந்து ஜெயா, ஸ்டுடன்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வரலக்ஷ்மி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார் ஷெரின்.

    எங்க இருந்து வந்துச்சுன்னே தெரியல இந்த கொரோனா.. பாதிக்கப்பட்ட ஷெரின்.. கவலையில் கலங்கும் ரசிகர்கள்! எங்க இருந்து வந்துச்சுன்னே தெரியல இந்த கொரோனா.. பாதிக்கப்பட்ட ஷெரின்.. கவலையில் கலங்கும் ரசிகர்கள்!

    ஐட்டம் பாடலுக்கு ஆடிய ஷெரின்

    ஐட்டம் பாடலுக்கு ஆடிய ஷெரின்

    திறமையான நடிகையாக இருந்த போதும் ஷெனுரினுக்கு தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். மேலும் கிடைத்த சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார் ஷெரின்.

    பிக்பாஸில் பங்கேற்ற ஷெரின்

    பிக்பாஸில் பங்கேற்ற ஷெரின்

    தமிழ், கன்னடம் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார் ஷெரின். கடைசியாக 2015ஆம் ஆண்டு வெளியான நண்பேன்டா படத்தில் நடித்திருந்தார் ஷெரின். அதன்பிறகு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    தர்ஷன் மீது காதல்

    தர்ஷன் மீது காதல்

    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று டாப் 5 ஃபைனலிஸ்டுகளில் ஒருவராய் இருந்தவர் ஷெரின். இதில் இறுதி வரை சென்ற ஷெரின் மூன்றாவது ரன்னர் அப் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான தர்ஷனை ஒரு தலையாக காதலித்தார் ஷெரின். பின்னர் தர்ஷனும் அவரது காதலியான சனம் ஷெட்டியும் பிரிந்த போது அதற்கு காரணம் ஷெரின் தான் என்ற பேச்சும் எழுந்தது.

    விதவிதமாக போட்டோ ஷூட்

    விதவிதமாக போட்டோ ஷூட்

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு குண்டாக ஆன்ட்டி லுக்கில் இருந்த ஷெரின், பிக்பாஸ் வீட்டுக்கு சென்ற பிறகு சிக்கென ஸ்லீம் ஃபிட்டானார். அவரது ட்ரான்ஸ்ஃபர்மேஷன் போட்டோ வெளியாகி பெரும் வைரலானது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகாவது பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார் ஷெரின். இதற்காக விதவிதமாக போட்டோ ஷூட்டுக்களையும் நடத்தி வந்தார்.

    Recommended Video

    செம்ம க்யூட்.. வைரலாகும் நடிகை ஷெரினின் அட்டகாசமான டிக்டாக் வீடியோ!
    ரஜினி என்ற படம்

    ரஜினி என்ற படம்

    ஆனால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது ஷெரினுக்கு. இந்நிலையில் நடிகை ஷெரின் புதிய படம் ஒன்றில் நடித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஷெரின் நடிப்பில் தற்போது 'ரஜினி' என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி இருக்கிறார். விஜய் சத்யா இதில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

    போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்

    போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்

    மேலும் வனிதா, மூக்குத்தி முருகன், குக்வித் கோமாளி பாலா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். ரஜினி படத்தை ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துள்ளார்கள். தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பர்ஸ்ட்லுக் போஸ்டர், பாடல்கள், டீசர், டிரைலர்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Actres Sherin new movie update. Sherin starts her second innings in a movie tattled as Rajini.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X