»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அப்பா பெரிய லொள்ளுக்காரர் என்றால் பிள்ளையோ பெரிய ஜொள்ளுக்காரராக இருக்கிறார்.

சத்யராஜின் வாரிசான சிபிராஜ் ஹீரோவாக அறிமுகமாகிய படமான "ஸ்டூடன்ட் நம்பர் 1" வெளியாகி சில நாட்கள் கூட ஆகாதநிலையில் அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் அதற்கு முன்பாகவே வந்து சக்கை போடு போடுகின்றன.

சிபிக்கு ஜோடியாக நடிக்கும் ஷெரீனுக்கும் அவருக்கும் இடையே "இது" உருவாகி விட்டதாகவும், தற்போது படம் வந்துஓரளவு நன்றாக பேசப் படுவதால் அந்த "இது" தற்போது வளர்ந்து, முற்றி வருவதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.

அடிக்கடி இருவரும் செல்போனில் கொஞ்சிக் கொள்வதாகவும் குலாவிக் கொள்வதாகவும் தகவல்.

அப்பாவுக்கும் இது தெரியும் என்றாலும் கொஞ்ச நாளைக்கு சிபியைப் பற்றி வதந்திகள் நிறைய வந்தால்தான் அவருக்கென்று ஒருமார்க்கெட் கிடைக்கும் என்பதால் "மகனே உன் சமர்த்து" என்று கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறாராம்.

இதே ஷெரீனைத் தான் சமீபத்தில் குதிரை மாதிரி இருக்காய்யா என்று மற்றவர்களிடம் வாய் பிளந்துபேசினார் சத்யராஜ். அவருடன் சேர்ந்து நடிக்கவும் சான்ஸ் தேடினார். இப்போது அவரது மகனுடன்கிசுகிசுக்கப்படுகிறார் ஷெரீன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil