»   »  ஷெர்லி மறுத்தார், ஷகீலா பிடித்தார்!

ஷெர்லி மறுத்தார், ஷகீலா பிடித்தார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெலுங்குப் படத்தில் கவர்ச்சிக் காட்சியுடன் கூடிய நடிப்பு வாய்ப்பை மறுத்துள்ளார் காதல் அரங்கம் படத்தில் முக்கால்வாசி உடம்புடன்நடித்துள்ள ஷெர்லி.

கடவுள், புரட்சிக்காரன் ஆகிய பகுத்தறிவுப் படங்களின் மூலம் தன்னை சமூக அக்கறையுள்ள இயக்குநராக காட்டிய வேலு பிரபாகரன்இப்போது வில்லங்கமாக ஒரு படத்தை எடுத்து வருகிறார்.

தமிழர்களுக்கு செக்ஸ் விழிப்புணர்வு குறைவாகவும், காதலைப் பற்றிய அளவுக்கதிமான கற்பனையும் உள்ளது. அதை நிவர்த்திக்கும்வகையில் இந்தப் படம் இருக்கும் என்று கூறி காதல் அரங்கம் படத்தைத் தொடங்கினார்.

இந்தப் படத்தின் நாயகி ஷெர்லி. இதில் இவர் உடையுடன் வரும் காட்சிகள் மிகவும் குறைவாம். ஒரு காட்சியில் மேலாடையை நீக்கியும்நடித்து அசத்தியுள்ளாராம்.


இப்படிப்பட்ட ஷெர்லியின் புகழ் டோலிவுட்டுக்கு (அதாங்கோ, தெலுங்குப் படவுலகம்) பரவாமல் இருக்குமா? டோலிவுட்டிலிருந்து ஒருகுரூப் கிளம்பி வந்து ஷெர்லியைப் பார்த்து தங்களது பிராஜக்ட் குறித்துக் கூறியது.

காதல் அரங்கம் போலவே எங்களது படத்திலும் மேலாடை இல்லாமலும், ஆடைகளைக் குறைத்தும் நடித்தருள வேண்டும் என்றுகும்பிட்டுள்ளார்கள். அதற்கு சாரி என்று சொல்லிவிட்டாராம் ஷெர்லி.

கவர்ச்சியாக நடிப்பது எனது கொள்கையல்ல, படத்தின் கதைக்குத் தேவைப்பட்டால்தான் கவர்ச்சி என்று கூறி தெலுங்குகாருகளை போகச்சொல்லி விட்டாராம்.

கடுப்பாகிப் போன அவர்கள் உடனே ஷகீலாவுக்குப் போன் போட்டு மேட்டரைக் கொட்டியுள்ளனர்.


முன்னுபவம் நிறைய உள்ள சீனியர் நடிகையாச்சே ஷகீலா, விடுவாரா வாய்ப்பை? அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்து அட்வான்ஸ்வாங்கிப் போயுள்ளாராம்.

இது ஒருபுறமிருக்க வேலு பிரபாகரனின் காதல் அரங்கம் படத்தின் டிரெய்லர் மிகவும் ஆபாசமாக இருப்பதாகக் கூறி தனியார் டிவிக்கள்அதை ஒளிபரப்ப மறுத்து விட்டனவாம்.

இந்தப் படம் இன்னும் தணிக்கைக்கு அனுப்பப்படவில்லை. படத்தின் டிரெய்லரை உருவாக்கிய வேலு பிரபாகரன் அதை தனியார்தொலைக்காட்சிகளுக்கு ஒளிபரப்புக்காக அனுப்பி வைத்தார்.

ஆனால் அனைவரும் அதை வேலு பிரபாகரனுக்கே திருப்பி அனுப்பி விட்டனராம்.

டிரெய்லர் படு ஆபாசமாக உள்ளது. இதை அப்படியே ஒளிபரப்ப முடியாது. எடிட் செய்து கொடுத்தால் ஒளிபரப்புகிறோம் எனறு கூறிவிட்டார்களாம் டிவி நிறுவனத்தார்.

இதனால் கடுப்பாகியுள்ளார் வேலு பிரபாகரன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil