»   »  ஷெர்லியின் அடுத்த அட்டாக்...

ஷெர்லியின் அடுத்த அட்டாக்...

Subscribe to Oneindia Tamil

மேலாடை இல்லாமல் திரையில் தோன்றி வட நாட்டு உள்ளங்களை நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் மல்லிகாஷெராவத், நேகா தூஃபியா போன்றவர்களை எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் ஓட ஓடவிட்டுவிடுவார் போலிருக்கிறது ஷெர்லி தாஸ்.

உடைக் குறைப்பில் மகா புரட்சியே படைத்துவிட்டிருக்கிறார் பெங்களூர் மாடலான ஷெர்லி. (சொந்த ஊர்கேரளாவாக்கும்..)

பரபரப்பு இயக்குனர் வேலு பிரபாகரனின் காதல் அரங்கம் படத்தில் இவர் காட்டியுள்ள கிளுகிளுப்புக்குஅளவோ, வரைமுறையோ சுத்தமாக இல்லை.

தென்னிந்திய நடிகைளில் யாரும் செய்திராத சாதனையாக ஒட்டு துணியில்லாமல் குளியல் காட்சியில்நடித்திருக்கிறார். ஆந்திராவில் சிவகோணம் அருவில் நடந்த சூட்டிங்கில் முதலில் லேசாக தயங்கியபடிஉடைகளைக் களைந்தவர் அப்புறம் கூச்சம் போனவராய் புகுந்து விளையாடிவிட்டாராம்.

ஆனால், அதைப் ரஷ் போட்டுப் பார்த்தபோது சென்சாரின் போர்டின் கத்திரிக் கோள்கள் நினைவில் வந்துமிரட்டிவிட்டுப் போக, உடனே கொசுவலை மாதிரியான டிரான்பரன்ட் வெள்ளைத் துணியை ஷெர்லி மீதுபட்டும்படாமல் போர்த்திவிட்டு மீண்டும் அந்தக் காட்சியை எடுத்து முடித்திருக்கிறார்கள்.

என்ன சார் இது ஓவர் புரட்சியா தெரியலை? என்று வேலு பிரபாகரனிடம் கேட்டால்,

ஹீரோ மட்டும் சட்டை போடாம மார்பையும் வயித்தையும் காட்றான். பெண்கள் அதைப் பார்க்கிறார்கள். அதேபோல ஹீரோயின் குளிப்பதை, பாவம் ஆண்கள் பார்த்துட்டுப் போகட்டுமே என்கிறார் ஒரே போடாக..

சார், என்ன சார் சொல்றீங்க... என்ன நம் மிரட்சியை வேலு பிரபாகரன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஷெர்லியின் இந்த முதல் பட அட்டாக்கில் இருந்து நாம் வெளியே மீள்வதற்குள், அவர் நடிக்கப் போகும் அடுத்தபடம் குறித்து விசாரித்தால் பயத்தில் ஜுரம் வந்துவிடும் போலிருந்தது.

இஷா கோபிகர், அம்ரிதா அரோராவை வைத்து லெஸ்பியன் ரிலேஷன்ஷிப் குறித்து இந்தியில் கேர்ள் பிரண்ட்என்ற எடுத்தார்களே, அதே மாதிரியான ஒரு ரகமான படத்தை தமிழிலும் எடுக்கப் போகிறார்கள். இங்கும்படத்தின் பெயர் கேர்ள் பிரண்ட் தான்.

இதில் ஷெர்லிக்கு நண்பியாக நடிக்கப் போவது வண்டார் குழலி வாண்டார் குழலி ஜிகினிசிக்காம் டோய் என்றுசெந்தமிழில் பாடி ஆடிய ஸ்மிதா.

கேர்ள் பிரண்ட் என்ற ஆங்கிலப் பெயரை வைத்து யாராவது பிரச்சனைகிளப்பினால், படத்தின் பெயரை தோழிகள் என்ற மாற்றவும் திட்டமிட்டிருக்கிறார்கள். அடாடாடா..

படத்தின் சதையை.. ஸாரி கதையை வைத்து பிரச்சனை கிளப்பினால் என்ன செய்வார்களோ?, தெரியவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil