ஷெரில் இனி சுனைனா!
| Click here for more images |
விஜயகாந்த் நடிக்கும் 150வது படம் அரசாங்கம். அவரது மைத்துனர் சுதீஷ் தயாரிக்கிறார். மாதேஷ் இயக்குகிறார். இதில் கேப்டனுக்கு ஜோடியாக நவ்னீத் கெளர் நடிக்கிறார். 2வது ஜோடியாக சமீபத்தில் ஷெரிலையும் புக் பண்ணினர்.
ஷெரிலின் இயற் பெயர் ஷெரில் பின்டோ. இந்தப் பெயருடன் நடிக்க வந்தால் சரியாக இருக்காது என்று விஜயகாந்த் கருதியுள்ளார். நல்ல பெயராக வையுங்கள் என்று இயக்குநரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து மாதேஷ் பல்வேறு வெப்சைட்டுகள், நூல்களை அலசி ஆராய்ந்து இறுதியில் சுனைனா என்ற பெயரை தேர்வு செய்தார். இந்தப் பெயருக்கு விஜயகாந்ததும் ஓ.கே., சொல்லி விட இப்போது ஷெரில் சுனைனா ஆகி விட்டார்.
தனது பெயரை மாற்றிய விவகாரம் ஷெரிலுக்கு பின்னர் தெரிய வந்ததாம். பெயர் மாற்றத்திற்காக வருத்தப்படாத ஷெரில், விஜயகாந்த்துக்கும், இயக்குநருக்கும் தனித் தனியாக நன்றி சொல்லிக் கொண்டாராம்.
ஆனால் காதலில் விழுந்தேன் படத்தின் நாயகி பெயரும் சுனைனாவாம். இதனால் குழப்பம் வராதா என்று ஷெரில் என்ற சுனைனாவிடம் கேட்டபோது, இதனால் ஒரு குழப்பமும் வராது. ஏற்கனவே கார்த்திகா என்ற பெயரில் இரு நடிகைகள் இருக்கிறார்கள் (ஒருவர் தூத்துக்குடி நாயகி, இன்னொருவர் நம்நாடு நாயகி). அதனால் குழப்பம் வந்ததா, இல்லையே.
அதுபோலவே எனது பெயரும் குழப்பத்தை ஏற்படுத்தாது என்று அழகாக சிரித்து வைத்து நமது குழப்பத்தை தீர்த்தார்.
பெயரில் என்ன இருக்கிறது, அதையா ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள்!


Click it and Unblock the Notifications











