twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    6 மாதமாக கோவிட்19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் அட்மிட்

    By
    |

    மும்பை: கொரோனா நோயாளிகளுக்கு நர்சாக மாறி சிகிச்சை அளித்து வந்த நடிகை ஷிகா மல்கோத்ரா, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி இருக்கின்றன.

    இந்தியாவிலும் கொரோனா தொற்றின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ரேகாவுக்கும் சனம் ஷெட்டிக்கும் சண்டை நடக்க காரணமே நம்ம மொட்டை தல சுரேஷ் தான்.. நடந்தது இதுதான்!ரேகாவுக்கும் சனம் ஷெட்டிக்கும் சண்டை நடக்க காரணமே நம்ம மொட்டை தல சுரேஷ் தான்.. நடந்தது இதுதான்!

    மருத்துவச் சேவை

    மருத்துவச் சேவை

    ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும், இந்த தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த தொற்று கடந்த ஏப்ரல் மாதம் தீவிரம் அடைந்தபோது, மருத்துவச் சேவையில் தன்னார்வலர்கள் இணைந்து கொள்ளலாம் என்று அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    ஷிகா மல்ஹோத்ரா

    ஷிகா மல்ஹோத்ரா

    இதையடுத்து பலர், கொரோனா நோயாளிகளுக்கு உதவினர். அதில் ஒருவர், நடிகை ஷிகா மல்ஹோத்ரா. இவர், இந்தியில் காஞ்ச்லி லைஃப் இன் எ ஸ்லாஹ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர். இதில் சஞ்சய் மிஸ்ரா நாயகனாக நடித்திருந்தார். தெடிப்பியா ஜோஷி இயக்கி இருந்த இந்தப் படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது.

    தன்னார்வ நர்ஸ்

    தன்னார்வ நர்ஸ்

    மும்பையில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் தன்னார்வ நர்ஸாக இணைந்த ஷிகா, நர்ஸிங்கில் பட்டப்படிப்பு முடித்தவர். நடிகையாகி விட்டதால், நர்ஸாக பணியாற்றாமல் இருந்தார். 'கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இக்கட்டான நேரத்தில் நர்ஸாக சேவையாற்றத் தயாராக இருக்கிறேன். உங்கள் ஆசிர்வாதம் தேவை. வீட்டிலேயே இருங்கள்' என்று அப்போது கூறியிருந்தார்.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    இவருடைய அம்மாவும் நர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் கொரோனா வார்டுகளில் பணிபுரிந்து வந்த நடிகை ஷிகா, இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய ஆக்சிஜன் அளவு குறைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    பெரிய விஷயமல்ல

    பெரிய விஷயமல்ல

    இதுபற்றி சோசியல் மீடியாவில் கூறியுள்ள அவர், கொரோனா பெரிய விஷயமல்ல என்று சொல்பவர்களுக்கு இந்தப் பதிவு. கடந்த 6 மாதமாக உங்கள் ஆசியுடன் கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்துள்ளேன். எனக்கு ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதாக உணர்ந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

    மருத்துவமனை

    மருத்துவமனை

    இந்தத் தொற்றை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கூறும் அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். கூடவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போட்டோவையும் சிகிச்சை அளிக்கச் சென்றபோது எடுத்த போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.

    Read more about: covid 19 கோவிட் 19
    English summary
    Actress Shikha Malhotra, who made headlines earlier this year when she volunteered to nurse Covid patients, has tested positive for the virus
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X