»   »  ஷில்பா.. 25 நாள்..3 கோடி!

ஷில்பா.. 25 நாள்..3 கோடி!

Subscribe to Oneindia Tamil

லண்டனைச் சேர்ந்த சேனல் 4 என்ற டிவி நிறுவனம் நடத்தும் பிக் பிரதர் நிகழ்ச்சியில்ஷில்பா ஷெட்டி பங்கேற்கவுள்ளார். இதற்காக அவருக்கு ரூ. 3 கோடி ரூபாய்வழங்கப்படவுள்ளது.

சேனல் 4 டிவி நிறுவனம் பிக் பிரதர் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. உலகின்பிரபலமான ஆண், பெண் பிரபலங்களை தேர்வு செய்து, ஒரு மாத காலத்துக்கு ஒருதனி வீட்டில் கும்பலாக தங்க வைத்து அவர்களின் அன்றாட செயல்பாடுகளைநேரடியாக ஒளிபரப்புவது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும்.

இதில் பங்கேற்பவர்களின் செயல்பாடுகளுக்கு நேயர்கள் அளிக்கும் ஆதரவுக்கு ஏற்ப,பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் நீடிப்பதற்கான நாட்கள் பற்றி முடிவு செய்யப்படும்.நிகழ்ச்சி இறுதியில் அதிக ஆதரவு பெறுவோறுக்கு கவர்ச்சிகரமான ஒரு பெரியதொகை பரிசாக வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்தநிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் பாலிவுட் நட்சத்திரம் என்ற பெருமை நடிகை ஷில்பாஷெட்டிக்கு கிடைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக ஷில்பா ஷெட்டிக்கு ரூ. 3 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.மொத்தம் 25 நாட்களுக்கு ஷில்பா தனி வீட்டில் பிற பிரமுகர்களுடன் தங்கியிருப்பார்.

ஷில்பா மற்றும் அவருடன் பங்கேற்கும் மேலும் 10 பிரமுகர்களும் கடந்தபுதன்கிழமை டிவி நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பளிச்சிடும்சேலை, ரவிக்கையில் படு அமர்க்களமாக வந்து நமஸ்தே சொல்லி அசத்தினார்ஷில்பா.

ஷில்பாவுடன் ஒரே வீட்டில் தங்கப் போகும் மற்ற பிரபலங்கள்: மைக்கேல் ஜாக்சனின்அண்ணன் ஜெர்மைன் ஜாக்சன், இங்கிலாந்தின் முன்னாள் அழகு ராணி டெனிலாலாய்டு, நடிகர் டிரிக் பெனடிக்ட், நடிகை ஷெலோ ரோக்காஸ், பத்திரிகையாளர் கரோல்மலோன், திரைப்பட இயக்குனர் கென் ஆகியோர் ஆவர்.

ஷில்பாவை சேனல் 4 நிகழ்ச்சி அமைப்பாளர் அறிமுகப்படுத்தியபோது அவரைஇந்தியாவின் ஏஞ்செலினா ஜூலி என்று அறிவித்தார். ஷில்பாவை இந்த நிகழ்ச்சியில்தேர்வு செய்து இருப்பதன் மூலம், இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களை கவரமுடியும் என்று பிக் பிரதர் நிகழச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிக் பிரதர் நிகழ்ச்சி குறித்து ஷில்பா கூறுகையில், பெரிய எதிர்பார்ப்பு எதுவும்இல்லை. இருந்தாலும் என் சுயமரியாதையையும், கெளரவத்தையும் என்னால் காக்கமுடியும் என உறுதியாக நம்புகிறேன் என அவர் கூறினார்.

காக்க முடியும்னா, எதைச் சொல்றார்?

Read more about: shilpas big date
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil