»   »  குளிக்கப் பயந்த ஷில்பா!

குளிக்கப் பயந்த ஷில்பா!

Subscribe to Oneindia Tamil

குளியலறையில் கேமரா, கீமரா இருக்குமோ என்ற பயத்தால் ஷில்பா ஷெட்டிகுளிக்கப் பயந்த காமெடி இங்கிலாந்தில் நடந்துள்ளது.

பிக் பிரதர் என்ற வித்தியாசமான நிகழ்ச்சியை இங்கிலாந்தின் சேனல் டி என்றதொலைக்காட்சி நடத்தி வருகிறது. உலகின் பிரபலமான 10 பேரை அழைத்து தனிவீட்டில் அவர்களை தங்க வைத்து அவர்களின் தினசரி வாழ்க்கையை காலை முதல்மாலை வரை ஒளிபரப்புவதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம்.

இப்படி ஒரு மாதத்திற்கு அவர்கள் தங்குவார்கள். நேயர்களின் ஆதரவைப்பெறுவோருக்கு அந்த நாட்கள் அதிகரிக்கப்படும். இந்நிகழ்ச்சியில் முதல் முறையாகஇந்தியர் ஒருவர் தேர்வாகியுள்ளார். அவர் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி. இதற்காகஅவருக்கு ரூ. 2 கோடி ரூபாய் சம்பளம் தரப்படுகிறது.

தனி வாழ்க்கையை ஆரம்பித்து விட்ட ஷில்பா ஷெட்டி முதல் நான்கு நாட்களுக்குத்தட்டுத் தடுமாறி விட்டாராம். அதாவது தனது தனிமை பாதிக்கப்படுவதாக அவர்நினைக்கிறாராம்.

வீட்டுக்குள் கேமராக்கள் வைக்கப்பட்டு அவரது நடவடிக்கைகள்கண்காணிக்கப்படுவதால் எதையும் சுதந்திரமாக செய்ய முடியாமல் தவிக்கிறாராம்.ரொம்ப முக்கியமாக குளிக்க அவர் அச்சப்படுகிறார்.

குளியலறையிலும் கேமராவை வைத்து ஷூட் செய்து விடுவார்களோ என்ற பயத்தில்பாத்ரூம் பக்கமே போகாமல் இருந்துள்ளார். கடந்த நான்கு நாட்களாக குளிக்காமல்கொள்ளாமல் அட்ஜஸ்ட் செய்து வந்துள்ளார்.

கூடத் தங்கியிருக்கும் பிரபலங்கள் கேமராவெல்லாம் கிடையாது, தைரியமாககுளியுங்கள் என்று சொல்லியும் அவர் குளிக்கப் பயந்துள்ளார். கை, கால், முகத்தில்மட்டும் தண்ணீரை விட்டுக் கொண்டு வந்துள்ளார்.

அவர் குளிக்க பயப்படுவதை அறிந்த பிக் பிரதர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்,பாத்ரூமில் கேமரா கிடையாது என உறுதி அளித்த பின்னர்தான் அவர்சமாதானமடைந்தாராம்.

இனி அவர் சுதந்திரமாக குளிப்பார் என்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் புன்னகையுடன்கூறினார். குளித்தாரா, இல்லையா என்பதை ஷில்பாதான் சொல்ல வேண்டும்.

திரிஷா ஃபேக்டர் இங்கிலாந்து வரை பரவி விட்டது!

Read more about: shilpa shettys bathroom fear

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil