»   »  ஹாலிவுட் போகும் ஷில்பா!

ஹாலிவுட் போகும் ஷில்பா!

Subscribe to Oneindia Tamil

பிக் பிரதர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி விட்ட ஷில்பா ஷெட்டி, அடுத்து ஹாலிவுட்டில் நுழைவதற்கானமுயற்சிகளை ஆரம்பித்து விட்டார்.

லண்டனைச் சேர்ந்த சேனல் 4 நடத்தும் பிக் பிரதர் நிகழ்ச்சியில் இந்திய ஸ்டார் ஷில்பா ஷெட்டி கலந்துகொண்டுள்ளார். ஆரம்பத்தில் ஷில்பா பெரிய அளவில் கவனிக்கப்படாதவராகத்தான் இருந்தார்.

ஆனால், நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்ற இங்கிலாந்து டிவி நடிகை ஜேட் கூடி, ஷில்பாவை இனவெறிவார்த்தையால் திட்டியதாக சர்ச்சை கிளம்பிய பின்னர் இங்கிலாந்து ரசிகர்களிடையே ஷில்பா வெகு பிரபலமாகிவிட்டார்.

இதனால் ஷில்பாவுக்கு ஆதரவு கூடி, ஜேட் கூடியை நிகழ்ச்சியை விட்டே தூக்கும் அளவுக்கு ஷில்பாவுக்குசப்போர்ட் பெருகியது. இதைத் தொடர்ந்து ஷில்பாவே இந்த நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடுவார் என்றஎதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஷில்பா வெற்றி பெற்றால் அவருக்கு ரூ. 1 கோடி அளவுக்கு பரிசுத் தொகை கிடைக்கும்.இதுதவிர ஹாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்குமாம். இதுதவிர இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகதனியாக ரூ. 3 கோடிப் பணமும் ஷில்பாவுக்குக் கிடைக்கும்.

ஷில்பா வெற்றி பெறுவாரா என்பது நாளை பிற்பகல் 2 மணிக்குத் தெரிந்து விடும். ஆனால் அதற்குள்ளாகவே,ஷில்பா ஹாலிவுட்டுக்கு ரூட் போட ஆரம்பித்துள்ளார்.

இங்கிலாந்தின் பிரபல மீடியா பி.ஆர்.ஓவான மாக்ஸ் கிளிப்போர்ட் அசோசியேட்ஸ் நிறுவனத்தை இங்கிலாந்து,அமெரிக்காவுக்கான தனது அதிகாரப்பூர்வ பி.ஆர்.ஓ.வாக அறிவித்துள்ளார் ஷில்பா. அதேபோல இங்கிலாந்தின்பிரபல சட்ட நிறுவனமான கார்டர் -ருக் நிறுவனம், ஷில்பாவின் சட்ட ஆலோசகராக செயல்படவுள்ளது.

இதுகுறித்து ஷில்பாவின் செய்தித் தொடர்பாளரான பக்வாகர் கூறுகையில், இங்கிலாந்து, அமெரிக்காவில் ஷில்பாதொடர்பான பிரசாரங்களை இனிமேல் கிளிப்போர்ட் நிறுவனம் பார்த்துக் கொள்ளும். பிக் பிரதர் நிகழ்ச்சியில்வெற்றி பெறுகிறாரோ, இல்லையோ, சர்வதேச அரங்கில் மிக முக்கியமான நபராக மாறி விட்டார் ஷில்பா.

ஹாலிவுட் திரையுலகில் ஷில்பா மிகப் பெ>ய அளவில் ஜொலிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.நாளை அவர் பிக் பிரதர் வீட்டிலிருந்து வெளியே வரும்போது மிகப் பிரகாசமான எதிர்காலம் அவரை வரவேற்ககாத்துள்ளது என்றார்.

இவர்கள் தவிர இங்கிலாந்துக்கான ஷில்பாவின் ஏஜென்டாக இந்தியரான பர்ஹத் ஹூசேன் செயல்படுவார்.அவரது மேலாளராக தஸ்லீம் பேகானி இருப்பார்.

ஹூசேனின் வேலையே, ஷில்பாவுக்கு ஹாலிவுட் பட வாய்ப்புகளை தேடிக் கொடுப்பதுதானாம். மேலும், ஷில்பாகுறித்த பிரசார நிகழ்ச்சிகளையும் அவர் இங்கிலாந்து, அமெரிக்காவில் நடத்துவார்.

உலக அளவில் படு பிரபலமாக அறியப்பட்ட இந்தியப் பெண் ஐஸ்வர்யாராய்தான். ஆனால் தற்போதுஐஸ்வர்யாவைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு செல்வாக்கு மிக்க இந்திய அழகியாக உருவெடுத்துள்ளார் ஷில்பா.விரைவில் அவர் ஹாலிவுட்டையும் கலக்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

1993ம் ஆண்டு பாஸிகர் படம் மூலம் திரையுலகுக்கு வந்தார் ஷில்பா. இந்தித் திரையுலகின் பிரபல நடிகையாகதிகழும் ஷில்பா ஷெட்டி, நடித்துள்ள இந்திப் படங்களான மெட்ரோ மற்றும் அப்னே ஆகியவை ரீலீஸுக்குத்தயாராக உள்ளன.

இந்த நிலையில் திடீர் உலகப் புகழ் பெற்றுள்ள ஷில்பாவை இனிமேல் அடிக்கடி லண்டனில் தான் பார்க்க வேண்டிவரும் போலிருக்கிறது!

இப்படி அடிக்கணும் அதிர்ஷ்டம்!

Read more about: shilpa shetty eyes hollywood
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil