»   »  ஸ்லிப் ஷில்பா, தூக்கிய பிலிப்

ஸ்லிப் ஷில்பா, தூக்கிய பிலிப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்து ராணியிடம் கைகுலுக்கப் போனபோது நடிகை ஷில்பா ஷெட்டி வழுக்கி விழுந்தார். அவரை ராணியின் கணவரும், இளவரசருமானபிலிப் கை கொடுத்துத் தூக்கி விட்டார்.

உள்ளூரில் விலை போகாத சரக்கு வெளியூரில் வெளுத்து வாங்குச்சாம். அந்தக் கதைதான் ஷில்பாவின் கதையும். இந்தியாவில் ஒரிரு படங்களைத்தவிர வேறு ஹிட் படம் எதையும் அவர் கொடுக்கவில்லை.

ஆனால் பிக் பிரதர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் உலகப் புகழ் பெற்று விட்டார் ஷில்பா. ஐஸ்வர்யா ராயைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்குஇப்போது வெளிநாடுகளில் ஷில்பாவின் முகம் பிரபலமாகி விட்டது. குறிப்பாக இங்கிலாந்தில் அவருக்கு நிறைய புதிய விசிறிகள் கிடைத்துள்ளனர்.

லண்டனில் ஏதாவது முக்கிய நிகழ்ச்சி நடந்தால் கூப்பிடு ஷில்பாவையும் என்று கூறும் அளவுக்கு பாப்புலர் ஆகி விட்டார் ஷில்பா. காமன்வெல்த்அமைப்பு உருவாக்கப்பட்டதன் நினைவு தினத்தையொட்டி லண்டனில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் இங்கிலாந்து ராணி எலிசபத், அவரது கணவர் இளவரசர் பிலிப் மற்றும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் உள்பட 2000க்கும்மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஷில்பாவுக்கும் ஒரு இன்விடேஷன் கொடுத்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் எய்ட்ஸ், எச்.ஐ.வி. விழிப்புணர்வு குறித்து ஷில்பா பேசினார். பேச்சை முடித்து விட்டு ராணியிடம் சென்ற ஷில்பா அவரிடம்கைகுலுக்குப் போனார். அப்போது திடீரென வழக்கி விழுந்து விட்டார்.

சரிந்து விழுந்த ஷில்பாவை லாவகமாக கை கொடுத்து தூக்கி விட்டார் ராணிக்கு அருகில் நின்ற பிலிப். அதன் பின்னர் ராணியிடம் கை கொடுத்தஷில்பா, அவரிடம் ஓரிரு நிமிடங்கள் பேசினார். ஷில்பாவின் பேச்சை ராணி வெகுவாகப் பாராட்டினார்.

பின்னர் நடந்த சிறப்பு விருந்திலும் ஷில்பா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil