»   »  டாக்டர் ஷில்பா ஷெட்டி!

டாக்டர் ஷில்பா ஷெட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவால் பொது மேடையில் கட்டிப் பிடித்து, மடக்கி, மடங்கி முத்தமிடப்பட்டு பரபரப்பில் சிக்கிய நடிகை ஷில்பா ஷெட்டிக்கு, கலாச்சார மேம்பாட்டுக்கு உழைத்ததற்காக இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.

மலையாளத்து குயிலான பாவனாவுக்கு நல்ல குரல் வளம், அதேபோல நல்ல கவி வளமும் கூட. ஷூட்டிங் பிரேக்கின்போது நகம் கடிக்கும் கையும், பேப்பரைக் கடிக்கும் பேனாவுமாகத்தான் இருக்கிறார்.

அம்மணி ஏன் இப்படி என்று கிட்டப் போய் உற்றுப் பார்த்தால்தான் அவர் கவிதை எழுதிக் கொண்டிருப்பது தெரியும். பாவனாவுக்கு கவிதை எழுதுவது என்றால் ரொம்பப் பிடிக்குமாம். கிடைக்கிற கேப்பில் கிடுகிடுவென கவிதைகளாக எழுதித் தள்ளி விடுவாராம்.

ஷூட்டிங்கில் பார்க்கும் விஷயம், இயற்கை, காதல், கோபம், தாபம் என பல வகையான கவிதைகளை எழுதிக் குவித்து வைத்துள்ளாராம். எல்லாவற்றையும் தொகுத்து புக் போடும் ஆவலும் உள்ளதாம்.

அப்படியே தனது மலையாளக் கவிதைகளை தமிழிலும் பிரசுரித்து தமிழ் மக்களையும் அசத்திடணும் என்ற பேராசையும் உள்ளதாம். இதுதான் அடிக்கடி அவரது கனவில் வந்து தனது கவிதைகள் எப்போது தமிழ் பேசும் என்று கேட்டு வருகிறதாம்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் எழுதிக் குவித்து வரும் கவிதைகளை மலையாளம் தெரிந்தவர்களிடம் வாசித்துக் காட்டி, எங்ஙன (எப்படி) உண்டு (இருக்கு) சேட்டா (பிரதர்)? என்று கேட்டு அணத்துகிறாராம் பாவனா.

இந்த அணத்தல் தாங்க முடியாமல் பாவானவைப் பார்த்தாலே பாதிப்பேர் அப்படியே கழன்று கொண்டு கமுக்கமாக ஒதுங்கி விடுகிறார்களாம்.

இருந்தாலும் பாவனாவின் கவிதைகள் அவ்வளவு மோசம் இல்லைதான். பாவனாவின் விழிகள் போலவே அவரது கவிதைகளும் கூராகவே இருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil