நீச்சல் குளத்தில் கவர்ச்சி பொங்க கேக் வெட்டிய ஷில்பா மஞ்சுநாத்.. இது வேறலெவல் பர்த்டே ட்ரீட்!
சென்னை: ஹரிஷ் கல்யாணின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட ஹீரோயின் ஷில்பா மஞ்சுநாத் நீச்சல் குளத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
லோ நெக் ஆடையுடன் கவர்ச்சி பொங்க கேக் வெட்டி பிறந்தநாளை ஷில்பா மஞ்சுநாத் கொண்டாடிய நிலையில், இதுவே செம ட்ரீட் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
நட்டி நட்ராஜ் உடன் வெப் எனும் படத்தில் நடித்து வருகிறார் ஷில்பா மஞ்சுநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

30 வயசு
1992ம் ஆண்டு பெங்களூருவில் பிறந்த நடிகை ஷில்பா மஞ்சுநாத் தனது 30வது பிறந்தநாளை மார்ச் 29ம் தேதி கொண்டாடினார். ஷில்பா மஞ்சுநாத்திற்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஹரிஷ் கல்யாணின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத்.

நீச்சல் குளத்தில் கேக் கட்டிங்
நடிகை ஷில்பா மஞ்சுநாத் சம்மரில் பிறந்தநாள் கொண்டாடுவதால் புதுவிதமாக இருக்கட்டுமே என நீச்சல் குளத்தில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் கேக் வெட்டி கொண்டாடிய போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்துள்ளார்.

கண்களுக்கு ட்ரீட்
கவர்ச்சி நடிகையான ஷில்பா மஞ்சுநாத் போட்டோக்களை சாதாரணமாக போட்டாலே செம ஹாட்டாக இருக்கும். இந்நிலையில், பிறந்தநாள் அதுவுமாக படு கவர்ச்சியான லோ நெக் கவுனை அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் கேக் வெட்டும் அழகை ரசிகர்கள் ரசித்த நிலையில், கண்களுக்கு செம ட்ரீட் கொடுத்துட்டீங்க ஷில்பா என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கிறங்கிப் போன ரசிகர்கள்
ஷில்பா மஞ்சுநாத் இப்படி செம ஹாட்டான உடையை அணிந்து கொண்டு கவர்ச்சி விருந்து கொடுத்தபடி கேக் வெட்டியதை பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு அவரை வர்ணித்து தள்ளி வருகின்றனர். பெங்களூரு பேபியான ஷில்பா மஞ்சுநாத் தமிழிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

நட்டி படத்தில்
அறிமுக இயக்குநர் ஹரூன் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி வரும் 'வெப்' என தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஷில்பா மஞ்சுநாத். சமீபத்தில் தான் அந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் நிறைவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











