ஜன்னல் வழியே பாயும் மின்சாரம் நீயடி... கவர்ச்சி கலவரத்தில் ஷில்பா மஞ்சுநாத் !
சென்னை : இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.
கடைசியாக இவரது நடிப்பில் இளமை துள்ளலுடன் உருவான தேவதாஸ் பிரதர்ஸ் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இப்பொழுது நடிகர் நட்டியுடன் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ஷில்பா மஞ்சுநாத் ஜன்னலின் வழியே மின்சாரம் பாய்வதுபோல கவர்ச்சி கலவரத்தில் மெர்சலாக நிற்கும் புகைப்படங்கள் ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறது.

இதய ராணி
இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்திருந்த காளி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் பிறகு ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்.

வேற லெவல் ஹி
இப்போது உள்ள இளைஞர்களுக்கு பிடிக்கின்ற வகையில் வெளியான திகட்டாத காதல் திரைப்படமான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஷில்பா மஞ்சுநாத்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது. ஹரிஷ் கல்யாண் மற்றும் ஷில்பாவுக்கு இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் மிகச்சிறப்பாக வொர்க்கவுட்டாக படமும் வேற லெவல் ஹிட்டடித்தது.

நட்டிக்கு ஜோடியாக
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்திற்கு பிறகு ரசிகர்கள் பலரும் இவரை இதயராணி எனவே அழைத்து வர கடைசியாக தேவதாஸ் பிரதர்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இளமைத் துள்ளலுடன் உருவான இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து பிரபல நடிகரும் ஒளிப்பதிவாளருமான நடிகர் நட்டிக்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

முன்னழகு கச்சிதமாக தெரிய
அறிமுக இயக்குனர் ஹரூன் இயக்கத்தில் நட்டி நடிக்கும் இந்த திரைப்படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் கதை களத்தில் உருவாகி வர முதல் முறையாக நட்டியுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் . இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க இருக்க இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது. அதில் முன்னழகு கச்சிதமாக தெரிய மயக்கும் பார்வையால் ஜன்னலோரம் நின்று கொண்டு மின்சாரம் பாய்ச்சியது போல கவர்ச்சி கலவரம் செய்துள்ள ஷில்பா மஞ்சுநாத்தை ரசிகர்கள் உருக உருக வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











