Exclusive: பாட்டி டு பியூட்டி... இரட்டை வேடம் போடும் 'இதய ராணி' ஷில்பா... பேரழகி சீக்ரெட்ஸ்!

Recommended Video

Actress Sajitha Madathil: படுக்கைக்கு அழைத்த உதவி இயக்குநர் பதிலடி கொடுத்த நடிகை- வீடியோ

சென்னை: பேரழகி படத்தில் பாட்டியாகவும், பேத்தியாகவும் நடிக்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.

காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் தற்போது நடித்துள்ள படம் பேரழகி.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிவதற்காக பேரழகி படத்தின் இயக்குனர் விஜயனை சந்தித்தேன்.

அவருடன் உரையாடியதில் இருந்து...

பேரழகி ஷில்பா

பேரழகி ஷில்பா

"பேரழகி ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். சீரியஸாக இல்லாமல், மிக ஜாலியாக காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். ஷில்பா மஞ்சுநாத் இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். சச்சு, மீசை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், சரவண சுப்பையா உள்பட நிறைய பேர் நடித்துள்ளனர். விவேக் ராஜ் ஹீரோவாக நடித்துள்ளார்.

படத்தின் கதை

படத்தின் கதை

படத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது.

பேத்தியாக மாறும் சச்சு

பேத்தியாக மாறும் சச்சு

ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். ஷில்பா தான் அந்த ரோலை செய்துள்ளார். அதன் பிறகு நடக்கும் குழப்பங்களை, காமெடியாக கூறியுள்ளோம். ஒரு ஜாலியான சயின்ஸ் பிக்ஷன் படமாக பேரழகி இருக்கும்.

தரமான கிராப்பிக்ஸ்

தரமான கிராப்பிக்ஸ்

ஷில்பா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். மொத்தம் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். விஜிபியில் அரண்மனை செட்டு போட்டு சில காட்சிகளை படமாக்கினோம். அது விஜிபி என்று தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் வேலைகள் செய்துள்ளோம். குறைந்த பட்ஜெட்டில் நல்ல படத்தை எடுத்துள்ளோம்", என விஜயன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X