கர்ணன் பட வில்லனுக்கு ஜோடியாக நடிக்கும் இதயராணி ஷில்பா மஞ்சுநாத்!

சென்னை : தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் சமீபத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் கண்ணபிரான் கதாபாத்திரத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றவர் நடிகர் நட்டி நடராஜன் .

பிரபலமான பல முன்னனி நடிகர்களின் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் அதே சமயம் குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் ஹாரூன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் நட்டி ஹீரோவாக நடிக்க இஸ்பேட்ராஜாவும்இதயராணியும் படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை ஷில்பா மஞ்சுநாத் இதில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

 கண்ணபிரான்

கண்ணபிரான்

பரியேறும் பெருமாள் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் தனுஷுடன் இணைந்து பணியாற்றி வந்த கர்ணன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி வேற லெவல் ஹிட்டடித்தது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியான கர்ணன் திரைப்படத்தில் கண்ணபிரான் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தவர் நடிகர் நட்டி. பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த நட்டி கர்ணன் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் வில்லனாக நடித்து அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெற்றிருந்தார். படம் வெளியாகி ஒரு மாதம் ஆகியும் ரசிகர்கள் தொடர்ந்து திட்டும் அளவுக்கு அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக செய்திருந்த நட்டி அதேசமயம் பல படங்களில் கதாநாயகனாகவும் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இப்பொழுது அஜித் நடித்து வரும் வலிமை படத்தை இயக்கும் ஹெச் வினோத் இயக்கத்தில் சதுரங்க வேட்டை படத்தில் நட்டி ஹீரோவாக நடித்து பட்டையைக் கிளப்பி இருப்பார்.

சதுரங்க வேட்டை

சதுரங்க வேட்டை

சக்கரவியூகம், மிளகா,முத்துக்கு முத்தாக என பல படங்களில் நடித்து வந்த நட்டிக்கு சதுரங்க வேட்டை மிகப்பெரிய அறிமுகப் படமாக அமைந்தது. வசீகரிக்கும் போய் பேச்சின் மூலம் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்ற செய்திகள் நாள்தோறும் நாளிதழ்களில் வலம் வந்து கொண்டிருக்க அதை அடிப்படையாகக் கொண்டு உருவான சதுரங்க வேட்டை திரைப்படம் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூல் புரிந்தது. சதுரங்க வேட்டை படத்திற்கு பிறகு நட்டிக்கு ஹீரோ அந்தஸ்து கிடைக்க கதம் கதம், எங்கிட்ட மோதாதே, போங்கு, என இவரது நடிப்பில் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வந்தன. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நெகட்டிவ் கலந்த முக்கிய வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடித்து கைத்தட்டல்களை பெற்றிருந்த நட்டிக்கு இப்பொழுது கர்ணன் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

அடல்ட் படத்தில்

அடல்ட் படத்தில்

வணக்கம் சென்னை படத்திற்கு பிறகு இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளிவந்த காளி மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் அடுத்ததாக ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இஸ்பேட்ராஜாவும்இதயராணியும் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். கன்னடம் மலையாளம் தமிழ் என மூன்று மொழிகளிலும் நடித்து வரும் இவர் இப்பொழுது தேவதாஸ் பிரதர்ஸ் என்ற அடல்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் நடிகர் நட்டி நட்ராஜ்க்கு ஜோடியாக புதிய ஒரே படத்தில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் ஒப்பந்தமாகியுள்ளார்.

த்ரில்லர் கதை

த்ரில்லர் கதை

சமீப காலமாகவே மலையாள படங்களுக்கு இணையாக தமிழிலும் த்ரில்லர் திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வர இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்று த்ரில்லர் கதை களத்தில் உருவாக உள்ளது. இப்படத்தில் நடிகர் நட்டி நடராஜ் ஹீரோவாக ஒப்பந்தம் ஆகி இருக்க ட்ரீம் ஹவுஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இதில் பிளாக் ஷீப் நந்தினி,சாஸ்திரி பாலா ப்ரீத்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இசைஞானி இளையராஜாவின் இளைய மகன் கார்த்திக்ராஜா பிசாசு 2 மூலம் மீண்டும் இசையமைப்பாளராக ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் இப்படத்திற்கும் இசையமைக்க உள்ளார்.

 நட்டிக்கு ஜோடியாக

நட்டிக்கு ஜோடியாக

இந்த நிலையில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் இந்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது . சமீப காலமாகவே கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகி வந்த ஷில்பா மஞ்சுநாத்க்கு பல இயக்குனர்கள் கதை கூறியும் வருகின்றனர். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்திற்கு பிறகு எந்த ஒரு படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறாததால் அடுத்து நடிக்கும் படங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறார். அதேபோல நடிகர் நட்டியம் தன்னுடைய படங்களை கவனத்துடன் தேர்ந்தெடுத்து வருகையில் இப்பொழுது இருவரும் முதல் முறையாக இணையும் என்ற த்ரில்லர் படம் நிச்சயம் ரசிகர்களை திருப்திபடுத்தும் என நம்பப்படுகிறது. ஷில்பா மஞ்சுநாத்துக்கு இந்த திரைப்படம் மற்றுமொரு வெற்றி படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க விரைவிலேயே படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம். கதைப்படி கதைக்களம் சென்னையில் நடைபெறுவதாக இருப்பதால் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது என தெரியவந்துள்ளது . அடுத்தடுத்து அப்டேட்கள் மற்றும் இதர நடிகர் நடிகைகளின் விவரங்கள் மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X