சோசியல் மீடியாவில் இருந்து வெளியேறிய பிரபல நடிகை... இதெல்லாம் ஒரு காரணமா?
சென்னை : சமூக வலைதளத்தில் இருந்து சில காலம் வெளியேறுவதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியேறுகிறேன் என்று, சொன்னதற்கான காரணம் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
இதனால், இணையவாசிகள் அந்த பிரபல நடிகையை வெச்சி செய்து வருகின்றனர்.

ஷில்பா ஷெட்டி
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி இவர் தமிழில், பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தொழிலதிபர் ராஜ்குந்த்ராவை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். இவர்களுக்கு மகள் ஒருவரும் இருக்கிறார். தற்போது படங்களில் பிஸியாக நடிக்காகவிட்டாலும், அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டிவருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷில்பா ஷெட்டி, வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் சில சொந்த விஷயங்களைப் பதிவு செய்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன. இதனால், சமூகவலைத்தளத்தில் ஏராளமான பாலோவர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
வெளியேறுகிறேன்
இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி, திடீரென சமூக வலைதளத்தில் இருந்து சிறிது காலம் ஒதுக்கி இருக்க முடிவு செய்து இருப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், ஒரே மாதிரியான விஷயங்களை பதிவு செய்து பதிவு செய்து மிகவும் சலிப்பு அடைந்துவிட்டதாகவும், புதிய விஷயத்தைக் கண்டுபிடிக்கும் வரை, சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கிண்டலடித்து வருகின்றனர்.
ஷில்பா ஷெட்டி சமூகவலைத்தளத்தைவிட்டு வெளியேறியதால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பல நெட்டிசன்ஸ் நீங்கள் வெளியேறுகிறேன் என்று சொன்னது கூட ஒகே ஆனால், அதற்கான சொன்ன காரணம் தான் சிரிப்பை ஏற்படுத்துவதாக பல நெட்டிசன்ஸ் ஷில்பா ஷெட்டியை கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











