ஷில்பா ஷெட்டி மார்பில் கை வைத்த நபர்.. என்னங்க நடக்குது?.. அதுவும் பப்ளிக்காகவே
மும்பை: பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஷில்பா ஷெட்டி. அங்கே பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த அவர்; தமிழிலும் ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். கோலிவுட் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. தொடர்ந்து கடந்த 2009ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஷில்பா. ஒரு மகனும், ஒரு மகளும் அவர்களுக்கு இருக்கிறார்கள். இந்நிலையில் அவரது மார்பில் ஒருவர் கை வைக்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
ஹிந்தி திரையுலகத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ஷில்பா ஷெட்டி. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார். ஸ்லிம் பியூட்டி, நடிக்கும் திறமை, நடன திறமை என அத்தனையும் அவரிடம் இருந்ததால் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. தொடர்ச்சியாக ஹிந்தியில் நடித்துவந்த அவருக்கு; மற்ற மொழிகளில் நடிப்பதற்கும் ஆஃபர் கிடைத்தது.

மிஸ்டர் ரோமியோ: அந்தவகையில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தார். படம் சுமாரான ஹிட்டானாலும்; ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் எல்லாம் பட்டையை கிளப்பின. ஷில்பாவும் பிரபுதேவாவுடன் அந்தப் பாடல்களுக்கு ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்தது. இருந்தாலும் கோலிவுட்டில் அவரது கவனம் முழுமையாக இல்லை. அதற்கு பிறகு குஷி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். அத்தோடு சரி; கோடம்பாக்கம் பக்கம் அவர் திரும்பி பார்க்கவில்லை.
ராஜ் குந்த்ராவுடன் திருமணம்: பிஸியாக நடித்துக்கொண்டிருந்தபோதே ராஜ் குந்த்ராவை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். நல்லபடியாக அவர்கள் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கையில் திடீரென ஒரு இடி விழுந்தது. அதாவது சில வருடங்களுக்கு முன்பு ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ரா அதிரடியாக கைது செய்யப்பட்டார். அது பெரும் பரபரப்பை இந்திய திரைத்துறையில் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
விட்டுக்கொடுக்காத ஷில்பா: அதுமட்டுமின்றி ராஜும், ஷில்பாவும் சேர்ந்து 60 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் ஒரு புகார் வந்தது. இப்படி தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்துவந்தாலும்; இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்கிறார்கள். ஒருமுறை ட்விட்டரில், 'seperation' என ராஜ் போட்டிருந்தார். இதனால் இரண்டு பேரும் பிரிகிறார்கள் என பேச்சுக்கள் கிளம்பின. ஆனால் அதெல்லாம் இல்லை என்பது பின்னர் உறுதியானது. தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்ட ஷில்பா; நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார்.
மார்பில் கை வைத்த நபர்: இந்நிலையில் புதிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளத். அதாவது மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் ஷில்பா ஷெட்டி. அப்போது ஜான்வி கபூரின் பெஸ்ட்டியான ஓரி என்பவரும், ஷில்பாவும் சேர்ந்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்கள். அந்த சமயத்தில் ஓரியின் நெஞ்சில் ஷில்பா கை வைக்க; ஓரியும் ஷில்பாவின் நெஞ்சில் கை வைத்தார். உடனே ஷில்பா ஷெட்டி ஷாக் கலந்த ஒரு எக்ஸ்பிரெஷனை கொடுத்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, என்னங்க பொது இடத்திலேயே இப்படி செய்துகொள்கிறார்கள் என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
மேலும், ஏற்கனவே கடந்த 2007ஆம் ஆண்டு ஒரு பொது நிகழ்ச்சியின் போது ஷில்பா ஷெட்டிக்கு ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு ஹிரி அநாகரீகமான முறையில் முத்தம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இது நடந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடிகை ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர், 'நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது தவறான கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன’ என்று குற்றஞ்சாட்டியிருந்தார். தற்போது இந்த விஷயத்தை பார்த்த ரசிகர்களோ, 'பொதுவெளிகளில் நடிகைகள் இப்படி நடந்துகொள்வது மட்டும் நியாயமா?’ என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications