ராஜ் குந்த்ராவின் கள்ளக்காதலி யார்?... ஷில்பாவே சொல்கிறார் கேளுங்க!
மும்பை என் கணவர் புத்தகம் எழுதியபோது எப்போது பார்த்தாலும் போனிலேயே இருப்பார். இதனால் அவருக்கு கள்ளக்காதல் இருப்பதாக நான் சந்தேகப்பட்டேன்... ஆனால் அதுகுறித்து ரகசியமாக நான் விசாரித்தபோதுதான் உண்மயான மேட்டர் தெரிந்தது என்று கூறியுள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.
லண்டனைச் சேர்ந்தவரான ராஜ் குந்த்ராவின் 2வது மனைவிதான் ஷில்பா ஷெட்டி. காதலித்து மணந்து கொண்டு ஒரு குழந்தைக்கும் பெற்றோராகியுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களாகவும் உள்ளனர். இந்த நிலையில் ஷில்பாவின் கணவர் 'How Not To Make Money' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசியபோது தனது கணவரின் 'கள்ளக்காதல்' குறித்த சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டார் ஷில்பா.

எப்போது பார்த்தாலும் போன் பேச்சு...
எனது கணவர் இந்தப் புத்தகத்தை எழுதிக் கொண்டிருந்தபோது எப்போது பார்த்தாலும் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருப்பார்.

யார் அந்தக் கள்ளி...
இதனால் எனக்கு அவர் மீது சந்தேகம் வந்தது. யாருடனோ அவருக்குத் தவறான தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டேன். யாராக இருந்தாலும் எப்போது பார்த்தாலும் போனில் பேசிக் கொண்டிருந்தால் சந்தேகம் வரத்தானே செய்யும்.. எனக்கும் அப்படித்தான் வந்தது.

தீவிர விசாரணை
இதையடுத்து யாருடன் அவர் பேசுகிறார் என்பதைக் கண்டுபிடிக்க ரகசியமாக விசாரணையில் இறங்கினேன்.. அப்போதுதான் எனக்கு உண்மை புரிந்தது.

அட.. நம்ம ஆர்யா
அவர் அடிக்கடியும், நீண்ட நேரமும் போனில் பேசிய நபர் யார் என்பதைக் கண்டுபிடித்து விட்டேன்... அது ஆர்யா, எனது கணவருடன் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதியவர். அவருடன்தான் அப்படி நெடுநேரமாக பேசி வந்துள்ளார் எனது கணவர்.

'What To Expect When Expecting'."
ஆரம்பத்தில் எனது கணவர் எழுதி வந்த புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியைப் படித்து வந்தேன். பிறகு அதை விட்டு விட்டேன்.. அதற்குப் பதில், 'What To Expect When Expecting' டைப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து விட்டேன் என்றார் ஷில்பா...
அடடா... சுருக்கமா முடிஞ்சு போச்சே!


Click it and Unblock the Notifications











