Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஓடிடிக்கு வருகிறார் ஷில்பா ஷெட்டி.. ரோகித் ஷெட்டியின் காப் யூனிவர்ஸின் முதல் பெண் போலீஸ் இவர்தான்!
மும்பை: ஆபாச படங்களை தயாரித்த விவாகரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நடிகை ஷில்பா ஷெட்டிக்கு சினிமாவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில், முதன்முறையாக ஓடிடியில் அறிமுகமாக போகிறார் ஷில்பா ஷெட்டி என்கிற அறிவிப்பு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ரோகித் ஷெட்டியின் காப் யூனிவர்ஸின் முதல் பெண் போலீஸ் இவர்தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நீலாம்பரி ரிட்டர்ன்ஸ்... நெல்சன் இயக்க போறது தலைவர் 169 ஆ? படையப்பா 2 ஆ?

46 வயசா ஆகுது
குஷி படத்தில் மேக்கோரீனா பாடலுக்கு நடனமாடியதை போலவே இன்னமும் அதே அழகுடனும் இளமையுடனும் இருந்து வரும் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு 46 வயதாகிறது என்று சொன்னால், ரசிகர்கள் யாருமே நம்ப மாட்டார்கள். யோகா செய்வதில் வல்லவரான ஷில்பா ஷெட்டி தனது உடம்பை இரும்பு போல அப்படியே பாதுகாத்து வைத்துள்ளார்.

ஆபாச பட பிரச்சனை
பாலிவுட்டில் நடிகையாகவும், ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராகவும் கலக்கி வந்த ஷில்பா ஷெட்டிக்கு பெரும் பின்னடைவாக அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நிகழ்வு ஏற்பட்டது. மேலும், ஷில்பா ஷெட்டியும் அவரது அம்மாவும் பண மோசடி வழக்கிலும் சிக்கி அவதிப்பட்டனர்.

ஓடிடியில் அறிமுகம்
தன்னையும் தனது கணவரையும் சுற்றி இருந்த பிரச்சனைகளை எல்லாம் ஒரு வழியாக சரிகட்டிய நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது முதன்முதலாக ஓடிடியில் அறிமுகமாக உள்ளார் என்கிற அறிவிப்பு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அமேசான் பிரைமில் விரைவில் வெளியாக உள்ள Indian Police Force எனும் வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாக மிரட்ட உள்ளார்.

பெண் போலீஸ்
சித்தார்த் மல்கோத்ரா போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இந்த வெப்சீரிஸில் பெண் போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ஷில்பா ஷெட்டி. பாலிவுட் பிரபலம் ரோகித் ஷெட்டியின் காப் யூனிவர்ஸில் முதல் பெண் போலீஸாக களமிறங்குகிறார் ஷில்பா ஷெட்டி. இது தொடர்பான அறிவிப்பை புதிய போஸ்டருடன் ஷில்பா ஷெட்டி மற்றும் ரோகித் ஷெட்டி ஷேர் செய்துள்ளனர்.

டிரெண்டிங்கில் ஷில்பா
ஷில்பா ஷெட்டியை போலீஸ் உடையில் பார்த்த ரசிகர்கள் #ShilpaShetty ஹாஷ்டேக்கை ட்விட்டரில் தெறிக்கவிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்தியன் போலீஸ் ஃபோர்ஸ் வெப்தொடரின் படப்பிடிப்பு பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அந்த வெப்சீரிஸை உருவாக்கி வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.