இது சரிபட்டு வராது: ட்விட்டரில் இருந்து விலகிய 'அண்ணியார்'
மும்பை: பிக் பாஸ் பிரபலம் ஷில்பா ஷிண்டே ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடரில் அண்ணியாராக நடித்து பிரபலமான ஷில்பா ஷிண்டே சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் 11 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார்.
அதன் பிறகு அவருக்கு ட்விட்டரில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்து ஆர்மி துவங்கிவிட்டனர்.

விளாசல்
ஷில்பாவை பற்றி யாராவது குறை கூறினால் அவரின் ரசிகர்கள் அந்த நபர்களை ட்விட்டரில் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள். ஷில்பாவை கிண்டல் செய்பவர்களை கதறவிடுகிறார்கள் அவரின் ரசிகர்கள். இதை எல்லாம் பார்த்து ஷில்பாவுக்கு வருத்தமாகிவிட்டது.
ஷில்பா
ஷில்பா ஷிண்டே தனது ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, சமூக வலைதளம் ஒரு மோசமான இடம். என் ரசிகர்களுக்கு என்னை மிகவும் பிடித்துள்ளது. அதனால் யாராவது என்னை பற்றி தவறாக பேசினாலோ, என்னை கிண்டல் செய்தாலோ சும்மாவிடுவது இல்லை. ஹேட்டர்களை பற்றி எனக்கு கவலை இல்லை ஆனால் என் ரசிகர்களால் அவர்களை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்கிறார் ஷில்பா.

மக்கள்
சமூக வலைதளம் என்பது பிறருடன் பழக, நம் கருத்துகளை தெரிவிக்க உதவும் இடம். ஆனால் மக்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். சமூக வலைதளம் எனக்கு ஒத்து வராது. அதனால் தான் வெளியேறிவிட்டேன் என்று ஷில்பா தெரிவித்துள்ளார்.

கவலை
ஷில்பா ட்விட்டரில் இருந்து வெளியேறியதை பார்த்து அவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ஆனால் அவரின் ஹேட்டர்களோ மிக்க மகிழ்ச்சியாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











