40 வயதில் நெடுஞ்சாலை ஹீரோயினுக்கு அடித்த ஜாக்பாட்.. கருப்பு வெற்றி.. 96 பட இயக்குநர் படத்தில் ஷிவதா!
சென்னை: வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 96, மெய்யழகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பேரன்பு கொண்ட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் பகத் ஃபாசில் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது. அந்த படத்தில் பகத் ஃபாசிலுக்கு ஜோடியாக 40 வயதாகும் நடிகை ஷிவதா இணைந்துள்ளார்.
பொதுவாகவே வயதான நடிகர்கள் தங்களை விட 20 வயது அல்லது குறைந்தபட்சம் 10 வயது இளமையான நடிகைகளையே படத்தில் கமிட் பண்ணுவார்கள்.

ஆனால், நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஷிவதாவை இந்த படத்தில் பகத் ஃபாசில் ஜோடியாக ஆக்கியுள்ளார் இயக்குநர் பிரேம் குமார்.
பகத் ஃபாசில் ஜோடி: இயக்குநர் சி. பிரேம் குமார் இயக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 32' என தற்காலிகப் பெயரிடப்பட்ட அடுத்த திரைப்படத்தில் பகத் ஃபாசில், ஷிவதா லீடு ரோலில் நடிக்கின்றனர். '96' மற்றும் 'மெய்யழகன்' போன்ற உணர்வுபூர்வமான வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இது அவரது முதல் ஆக்ஷன்-த்ரில்லர் முயற்சி. இத்திரைப்படம் ஒரு நேரடித் தமிழ்ப் படைப்பாக உருவாகிறது.

களைகட்டிய பட பூஜை: மூக்குத்தி அம்மன் 2, டயங்கரம் என பல படங்களை தயாரித்து வரும் வேல்ஸ் நிறுவனம் நேற்று கோபட பூஜையில் பிரேம் குமார் பேசுகையில், "96, மெய்யழகன் படங்களில் ரசிகர்களுடன் இணைந்த உணர்ச்சிகரமான அம்சம் இப்படத்திலும் இருக்கும்" என வலியுறுத்தினார். நான்கு ஆண்டுகளாகத் திரைக்கதையை உருவாக்கி, பலரது அறிவுறுத்தலையும் மீறி இத்திட்டத்தை ஃபகத்தின் நேர்மறையான பதிலுடன் கையிலெடுத்துள்ளாராம்.. தொடர்ந்து தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை தேர்வு செய்து வரும் ஃபகத் ஃபாசிலுக்கு இது கண்டிப்பாக ஃபீல் குட் மூவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
40 வயதில் ஜாக்பாட்: ஃபகத் பாசில் மற்றும் ஷிவதா முதல் முறையாக முன்னணி ஜோடிகளாக இணைகின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்க, மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். கோவிந்தராஜன் படத்தொகுப்பாளர். சேத்தன், ஹரிஷ் உத்தமன், கருணாகரன் ஆகியோர் துணை வேடங்களில் உள்ளனர். இசரி கே. கணேஷ் வழங்கும் இப்படத்தை, வெல்ஸ் பிக்சர் இன்டர்நேஷனல் மற்றும் மான்சூன் மூவிஸ் இணைந்து தயாரிக்கின்றன. கருப்பு படத்தில் அமைச்சரால் பாதிக்கப்பட்ட பெண் கதாபாத்திரத்தில் ரொம்பவே ஸ்ட்ராங்காக நடித்த ஷிவதா தற்போது ஃபகத் ஜோடியாக நடிப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications