கையில் மாலையுடன் ஷிவானி நாராயணன்.. பிறந்தநாள் அதுவுமா பக்தி பரவசமா செம போஸ்.. வாழ்த்தும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை ஷிவானி நாராயணன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சின்னத்திரை நடிகையாக வலம் வந்த ஷிவானி நாராயணன் பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் நடிகை ஷிவானி நாராயணனுக்கு பல படங்கள் புக் ஆகி வருகின்றன.

21 வயசு தான்
கடந்த 2001ம் ஆண்டு மே 5ம் தேதி பிறந்த 2கே கிட் தான் நடிகை ஷிவானி நாராயணன். விருதுநகரில் நாராயணன் மற்றும் அகிலா நாராயணன் தம்பதியினருக்கு மகளாக பிறந்தார். 2016ம் ஆண்டு பகல் நிலவு சீரியல் மூலம் நடிக்க வந்த ஷிவானி நாராயணன் விஜய் டிவி சீரியல்களில் நடித்து வந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக் பாஸ் ஷிவானி
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை ஷிவானி நாராயணன். அப்போதே இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ரசிகர்களுடன் மற்ற போட்டியாளர்களுக்கு செம டஃப் கொடுத்து வந்தார். கடைசி வரை ஷிவானி இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிராண்ட் ஃபினாலே வாரத்திற்கு முன்னதாக சிங்கப்பெண்ணாக வெளியேறினார்.

கையில் மாலையுடன்
கடந்த ஆண்டு பாலாஜி முருகதாஸ் உடன் பார்ட்டி வைத்து பிறந்தநாள் கொண்டாடிய ஷிவானி நாராயணன் இன்று காலையிலேயே கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து கையில் மாலையுடன் நெற்றியில் விபூதியுடன் அழகாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை ஷேர் செய்து பிறந்தநாளுக்கு வாழ்த்தும் ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மாட்டு தொழுவத்தில்
மேலும், மாட்டு தொழுவத்தில் பசுக்களுடன் நின்றபடி எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தையும் ஷேர் செய்திருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் ஷிவானியின் புகைப்படங்களை பார்த்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

பல படங்கள்
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் ஷிவானி நாராயணன் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படத்திலும் ஷிவானி நாராயணன் நடித்து வருகிறார். ஆர்.ஜே. பாலாஜி உடன் ஒரு படம், 8 தோட்டாக்கள் வெற்றி நடிப்பில் உருவாகி வரும் பம்பர் படம் மற்றும் வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என பல படங்களில் நடித்து வருகிறார் ஷிவானி நாராயணன். அடுத்த பிறந்தநாளுக்குள் அத்தனை படங்களும் வெளியாகி வேற லெவலில் அசத்தப் போகிறார்.


Click it and Unblock the Notifications











