திடீரென டிரெண்டான பிக் பாஸ் ஷிவானி நாராயணன் ஹாஷ்டேக்.. என்ன மேட்டருன்னு தெரியுமா

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷிவானி நாராயணன் திடீரென ட்விட்டர் டிரெண்டிங்கில் டாப்பில் உள்ளார்.

#ShivaniNarayanan என்கிற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து பிக் பாஸ் ரசிகர்கள் மற்றும் ஷிவானி நாராயணனின் தீவிர ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

சின்னத்திரை நடிகையாக உள்ள ஷிவானி நாராயணன் எப்போதான் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைப்பார் என ஏகப்பட்ட ரசிகர்கள் ஒரு பக்கம் ஏங்கி வருகின்றனர்.

திடீர் டிரெண்டிங்

திடீர் டிரெண்டிங்

பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் தினமும் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை குவித்துள்ளார். இந்நிலையில், சன் டே ஸ்பெஷலாக திடீரென அவரது #ShivaniNarayanan ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே 2 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டிருந்த நடிகை ஷிவானி நாராயணன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை மீண்டும் பதிவிட்டு 3 மில்லியன் ஃபாலோயர்களை தனது இன்ஸ்டாகிராம் குடும்பத்தில் இணைத்துள்ளார். அதன் காரணமாகவே தற்போது ஷிவானி நாராயணனின் ஹாஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் தெறிக்குது.

நடிகைகளை விட

நடிகைகளை விட

சில முன்னணி நடிகைகளை விட இன்ஸ்டாகிராமில் ஷிவானி நாராயணனுக்கு அதிக ஃபாலோயர்கள் இருப்பது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது. அந்த அளவுக்கு ரசிகர்களின் மனம் அறிந்து அவர்களை ஈர்க்கும் ஏகப்பட்ட வேலைகளை தொடர்ந்து செய்தே இப்படியொரு சாதனையை படைத்துள்ளார்.

சிங்கப்பெண் பட்டம்

சிங்கப்பெண் பட்டம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டம்மி பீசாகவே ஷிவானி நாராயணனை காட்டியது அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியது. மிக்சர் தின்னி, பாலா பின்னாடி சுற்றுவது என்றே ஷிவானியின் போர்ஷன் பிக் பாஸில் சென்றது. கடைசியாக அவரை சிங்கப்பெண்ணாக மாற்றி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றிய இடத்தில் விஜய் டிவி திட்டுக்களில் இருந்து தப்பித்துக் கொண்டது.

வெற்றி மகள்

வெற்றி மகள்

அய்யோ எவ்ளோ அழகுப்பா நம்ம ஷிவு என ஷிவானி நாராயணனின் போட்டோக்களை ஷேர் செய்து #ShivaniNarayanan ஹாஷ்டேக் உடன் #VetriMagalHits3M என்கிற இன்னொரு ஹாஷ்டேக்கையும் சேர்த்து ஷிவானி ரசிகர்கள் டிரெண்ட் செய்து தெறிக்கவிட்டு வருகின்றனர்.

தங்க தலைவி

தங்க தலைவி

3 மில்லியன் இன்ஸ்டாகிராம் இதயங்களை கொண்ட தங்க தலைவி என காமன் டிபிக்களை எல்லாம் உருவாக்கி வேற லெவலில் ஷிவானி நாராயணை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

பிரின்சஸ்

பிரின்சஸ்

கருப்பு நிற கவுனில் தொடையழகை காட்டியபடி சமீபத்தில் போட்டோக்களை போட்டு அசத்திய ஷிவானியின் போட்டோக்களை எடுத்து ஷேர் செய்து இன்ஸ்டாகிராமின் பிரின்சஸ் ஷிவானி என வேற லெவலில் போட்டோ கமெண்ட்டுகளை போட்டு வெறித்தனம் காட்டி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

உம்மா

உம்மா

3 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ஷிவானி நாராயணனை யாரெல்லாம் டிரெண்ட் செய்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இதோ ஷிவானியின் உம்மா என முத்தம் கொடுக்கும் ஷிவானி நாராயணனின் ஜிஃப் இமேஜை போட்டு கெத்துக் காட்டி வருகின்றனர்.

அழகு கடவுள்

அழகு கடவுள்

பேரழகியான ஷிவானி நாராயணின் நடன திறமைக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தலைவி கமெண்ட்டை எல்லாம் தாண்டி Elegant Goddess என அழகு கடவுள் என்றே ஷிவானியை பூஜிக்கும் ரேஞ்சுக்கு பிக் பாஸ் ரசிகர்கள் சென்று விட்டனர்.

நல்ல மனசு

நல்ல மனசு

அவருடைய கள்ளமில்லாத சிரிப்பழகிலேயே அவரது நல்ல மனசு தெளிவாக தெரியும் என நடிகை ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட்டாக ஜீன்ஸ் உடை அணிந்து கொண்டு சும்மா கேஷுவலாக அமர்ந்தபடி போஸ் கொடுத்த போட்டோக்களை போட்டு ரசிகர்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.

அமேஸிங்

அமேஸிங்

எப்போதுமே அசத்தலாக ஏதாவது செய்து தனது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் ஷிவானி நாராயணன் அவரை போலவே எப்போதுமே அமேஸிங்காக இருக்க வேண்டும் என ஷிவானி அந்தரத்தில் தொங்கி அட்டகாசமாக யோகா செய்த புகைப்படத்தை ஷேர் செய்து தத்துவ மழையையும் பொழிந்து வருகின்றனர்.

Recommended Video

Assistant Director ஆக இருந்து Actor ஆனேன் | Actor Ramachandran Chat | Filmibeat Tamil
வாழ்த்துக்கள் தங்கமே

வாழ்த்துக்கள் தங்கமே

3 மில்லியன் இதயங்களும் இந்த இமாலய சாதனைக்கு உங்களை வாழ்த்துகிறது தங்கமே என ரசிகர்கள் ஹாஷ்டேக்கை வேற மாறி டிரெண்ட் செய்து பட்டையை கிளப்பி வருகின்றனர். ரசிகர்களின் இந்த அன்புக்கு நிச்சயம் அடுத்த செட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு எப்படி அசத்தப் போகிறார் ஷிவானி என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X